சி. இரத்தினசபாபதி

சுதுமலையில் சண்முகசேகர முதலியின் மரபில் உதித்த விநாசித்தம்பி சின்னப்பா அவர்களும் அபிராமிப்பிள்ளை அம்மையும் செய்த நற்றவப் பேறாக 23.4.1901 இல் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். தனது 22ஆவது வயதில் இருந்து உடுவில் மான் – ஆங்கில பாடசாலையில் 24 ஆண்டுகள் கடமையாற்றினார். தனது 29 வயதில் மகாஜனக் கல்லூரி அதிபர் ஜயரத்தினத்தின் பாரியாரின் சகோதரி சுகிர்தரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். மகாஜனக் கல்லூரியில் அவரது சேவை தொடர்ந்தது. தெல்லிப்பழை கூட்டுறவுச் சங்கத்திலும் பதினைந்து வருடங்கள் காரியஸ்தராக இவர் ஆற்றிய சமூக சேவை மதிப்பிடற்கரியது.

சுதுமலை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக, செயலாளராக, பொருளாளராக பதவிகளில் வகித்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவினார். கரப்பந்தாட்டக் குழுவை உருவாக்கி அக்குழுவின் தலைவராக இருந்து அக்குழுவை வெளியூர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றார். நாடக சபையை நிறுவி சேக்ஸ்பியரின் நாடகங்களான As You like it, Macbeth, Merchant of Vinice, Othello ஆகிய நாடகங்களை ஆங்கிலம் கற்றவர்களைக் கொண்டு ஆங்கிலத்திலேயே மேடையேற்றினார். இவைதவிர குமணவள்ளல், சீதாராம கல்யாணம், ஸ்ரீ வள்ளி ஆகிய தமிழ் நாடகங்களும் இவரால் மேடையேற்றப்பட்டன.

கூட்டுறவுக் கடன் சபையில் பொருளாளராகப் பதவி வகித்த போது சுதுமலை விவசாயிகளுக்கு கடன் வழங்கி அவர்களை ஊக்குவித்தார். இத்தகைய பெரியார் 25.2.1980இல் புகழுடம்பு பெற்று இறைவன் திருவடி சேர்ந்தார்.

நன்றி- மூலம்- www.suthumalai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345