சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்

சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்

சுதுமலைக் கிராமத்திலே சைவச் சிறார்கள் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்குடன் திரு. நா. ஆறுமுகபிள்ளை சிந்நயபிள்ளை அவர்கள் சின்னையா பள்ளிக்கூடம் என்ற பெயரில் 1885 யூன் 15ம் திகதி சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் பாடசாலையை ஆரம்பித்தார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமது சேவையை இப் பாடசாலைக்கு ஆற்றியுள்ளார். இவரது காலத்தில் ஆரம்பப் பிரிவுப் பகுதியே ஆரம்பிக்கப்பட்டது. ‘தண்ணீர்க் குண்டடி‘ எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை பல்வேறு காரணங்களால் சுதுமலை மத்தியில் மாற்றப்பட்டது.

சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்

1905 ம் ஆண்டு சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றப்பட்டது. திரு. ஆ. சிந்நயபிள்ளையின் சேவையை அடுத்து உடுப்பிட்டி முருகேசு, உடுவிலைச் சேர்ந்த திரு.லோரன்ஸ், தெல்லிப்பளையைச் சேர்ந்த திரு. குமாரகுரு ஆகியோர் தலைமை ஆசிரியர்களாகச் சேவை ஆற்றினார்கள். அடுத்து நுணாவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை அவர்கள் சேவையாற்றினார். இக் காலத்தில் ஆரம்ப கனிஷ்ட நிலை, இடைநிலை ஆகிய பிரிவுகள் காணப்பட்டன. பரீட்சைகளும் நடாத்தப்பட்டன. திரு.தம்பாப்பிள்ளை அவர்கள் இளைப்பாறிய பின்பு தாவடியைச் சேர்ந்த திரு.இராமலிங்கம் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். இக் காலப்பகுதியில் ஸ்தாபகரின் மருமகனின் காணி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.
திரு. இராசதுரை அவர்களை அடுத்து ஏழாழை திரு.செல்லத்துரை அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். இக் காலத்தில் பாடசாலையின் 6ம், 7ம் தரங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்பு 03.05.1981 கட்டுடையைச் சேர்ந்த திருமதி. ஜெயதேவி கிருஸ்ணசாமி அதிபராகக் கடைமையைப் பொறுப்பேற்றார். இவரது இப் பாடசாலைக் காலம் ஒரு பொற்காலம். 7ம் தரம் வரை இருந்த வகுப்புக்கள் 11 ம் தரம் வரை உயர்த்தப்பட்டன. ஒவ்வொரு வகுப்பும் இருபிரிவைக் கொண்டிருந்தது. இக் காலப் பகுதியில் மாணவர்கள் மாவட்ட ரீதிவரை மெய்வல்லுனர்ப் போட்டி, உடற்பயிற்சிப் போட்டி, தமிழ்த்தினப் போட்டி, பண்ணிசைப் போட்டி என்பவற்றில் பங்குபற்றி முதலாம், இரண்டாம் இடங்களைத் தட்டிக் கொண்டனர். முதன் முதலாக 1985 ஆண்டு கா.பொ.த பரீட்சையில் 5 மாணவர்கள் தோற்றி சித்தியடைந்தனர். 1980 ம் ஆண்டு இடப்பட்ட புதிய கட்டிடத்திற்கான அத்திவாரம் இவரது காலத்தில் அடுக்குமாடிக்கட்டிடமாக முழுமை பெற்று புதிய அதிபர் காரியாலயமும் அமைக்கப்பட்டது.

04.06.1993 வரை சேவையாற்றி திருமதி. கிருஸ்ணசாமி ஓய்வு பெற திருமதி. சூரியகுமாரி ஜெயவீரசிங்கம் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரை அடுத்து 1995 இல் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. குபேரநாதன் அவர்கள் கடைமையாற்றினார். அவரது காலத்திலும் பாடசாலை கல்வி வளர்ச்சியிலும் பௌதீக வளர்ச்சியிலும் அபிவிருத்தியடைந்து புதிய விஞ்ஞான ஆய்வுகூடம் நிறுவப்பட்டது. புதிய விளையாட்டுமைதானம் கொள்வனவு செய்யப்பட்டது. 22.02.2002 வரை இவர் பணியாற்றினார். இவரையடுத்து இணுவிலைச் சேர்ந்த திரு. தர்மசோதி அவர்கள் அதிபராகக் கடைமையேற்றார்.

அவரது காலத்தில் செல்வி. கௌதமி யோகநாதன் என்பவர் கணணி மென்பொருள் போட்டியில் பங்குபற்றி மாகாணமட்டத்தில் முதலிடம் பெற்றமையால் வலிகாம வலயத்தின் மூலம் 10 கணணிகள் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்

பாடசாலை ஸ்தாபகர்

பாடசாலைக்கீதம்
வாழிய சுதுமலை சிந்மய பாரதி
வித்யாசாலையின் வளமே
சிந்மய நன்நய சாஸ்திரியார் ம
னச் செம்மையில் உதித்த கல்லூரி
பன்னருங் கலை பல வளர்த்து நூற்றாண்டுகள்
புணிபல புரியும் கல்லூரி
வாழிய வாழிய சிந்மயபாரதி
வித்தியாமாதா என்றும்
வாழிய உண்மையும் ஒழுக்கமும்
பேணி வாழிய வாழிய நன்றே
கல்வியும் ஞானமும் கண்களாய் கொண்டென்றும்
கடமையைப்புரியும் கல்லூரி
நல்லவர் வல்லவர் பலர் தமை
நாட்டிற்கு நல்கியே வளரும் கல்லூரி
செந்தமிழ் வளம் பெறச்சீருடன்
பணிபுரி எந்தாய் வாழிய என்றும்
விந்தை மிகுந்திடு விஞ்ஞானம் ஓங்கியே
விளங்குக வீறுடன் நன்றே

சிந்மயா

பாடசாலை இலச்சினை

By – Shutharsan.S

மேலதிக விபரங்களுக்கு – http://chinmaya.suthumalai.com/ இணையம்.

Sharing is caring!

Add your review

12345