தட்டையர் மலை

முத்தையன்கட்டில் இருக்கும் ஓர் இடம் தட்டையர் மலை. இங்கு அழிவடைந்த நிலையில், அரசமாளிகை ஒன்று இருந்ததற்கான எச்சங்கள் உள்ளது. ஆனால் அதில் தற்போது எஞ்சி இருப்பது, கருங்கல்லினால் பொழியப்பட்ட வாசல்படி மட்டுமே. ஏனையவை கல் உடைப்பவர்களினால் (Quarry)  உடைக்கப்பட்டுவிட்டது. குவாரிக்காரர்களின் கண்ணுக்கு அந்த வரலாற்று பொக்கிசம் வெறும் கருங்கல்லாகவே தெரிந்துள்ளது. எமது ஊரில் உள்ள படித்தவர்களும் இதைப் பெரிதாகவே கண்டு கொள்ளவே இல்லை என்பது, மிகவும் கவலையான விடயம்.

ஓர் சில பெரியவர்களிடம் தட்டையர்மலை பற்றி விசாரித்த பொழுது, அது அரசர்கள் நாட்டு வளையம்  (நாட்டைப் பற்றி அறிய மன்னர்கள் பரிவாரங்களுடன் ஒவ்வோர் ஊராகச் செல்வதை நாட்டு வளையம் என்பார்கள்) வரும்போது தட்டையர் மலையில் உள்ள அரச மாளிகையில் தங்குவார்களாம் என்று அவர் கூறினார். மேலும் இங்குள்ள மாளிகை, உல்லாச மாளிகையாகவும் இருக்க வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தட்டையர்மலையில் இருந்துதான், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய ஆறுகளில் ஒன்றான பேராறு உற்பத்தி ஆகின்றது. இந்த பேராறு உற்பத்தியாகும் இடம் மிகவும் ரம்மியமானது. அது காடும் சிறிய குன்றும் சார்ந்த பிரதேசமாகும். தட்டையர் மலையில் உள்ள அரச மாளிகையை சுற்றி சிறிய அகழி ஒன்றும் உள்ளது. இந்த அகழிக்கு பேராறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்துதான் நீர் செல்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி பெரிய மருத மரங்கள் நிற்கின்றன. மருத மரங்கள் இப்பகுதியை மேலும் அழகாகக் காட்சி அளிக்க வைக்கின்றது.

 

By -‘[googleplusauthor]’

Sharing is caring!

Add your review

12345