தம்பாலை வடுகன் நாவலடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்

1875ம் ஆண்டளவில் திரு கார்த்திகேசு என்பவரால் நாவல் மரப்பொந்தில் திருசூலங்களை நாட்டி வழிபடப்பட்டு வந்ததாகவும், அதன் பின் அவா ;பரம்பரையில் வந்த திருமதி இ.முத்தம்மாவால் ஆதரிக்கப்பட்டு வருவதாகவும் இத்திருத்தலம் பற்றி அறியக்கிடக்கின்றது. வருடாவருடம் சித்திரை பறுவத்தில் திருக்குளிர்த்தியும், பொங்கலும் நடைபெற்று வருகின்றன. நாவல் மரத்தின் முன்பாக சீமேந்தால் கோவில் கட்டி அதில் வைரவரை பிரதிஸ்டை செய்து 25.04.2002 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆதி வைரவர் இன்றும் நாவற்பொந்தில் அமைந்துள்ளார் இதற்கு சிறிய கதவு அமைத்து அவ் ஆதிவைரவருக்கு முத்தம்மா குடும்பத்தினர் தினமும் திருவிளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். பிரதிஸ்டா மூர்த்திக்கு பூசகர் மூலம் பூசைகள் நடைபெற்று வருகின்றது. இருமூர்த்திகளையும் முன்பின் இரு கதவுகளினூடாக கண்டு தரிசிக்ககூடிய விதத்தில் இத்திருத்தலம் அமைந்திருப்பது விசேட அம்சமாகும். இதற்கு குழாய்க்கிணறும் உண்டு.

Sharing is caring!

Add your review

12345