தாழையடி மு.சபாரத்தினம்

தாழையடி மு.சபாரத்தினம்

தாழையடி மு.சபாரத்தினம் அவர்கள் புனைகதை எழுத்தாளர். இவர் 1921 – 1967 காலப்பகுதியில் வாழ்ந்தார். திருநெல்வேலி தாழையடிக் கிராமத்தில் வாழ்ந்த இவர் காலத்திற்கேற்ப வடிவில் புனைகதை இலக்கியம் படைத்தவர். கல்கி என்னும் தென்னிந்திய சஞ்சிகையின் சிறுகதைப் போடடி ஒன்றில் கலந்து மூன்றாவது பரிசினைப் பெற்றதன் மூலம் ஈழத்து இலக்கியத்துள் நுழைந்து கொண்ட இவர் அசுர கெதியில் பல சிறுகதைகளைப் படைத்து ஈழத்து வாசகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தார். ”ஈழத்து சிறுகதைகள்” தொகுப்பில் இவர் எழுதிய ”குருவின் சதி” என்னும் குருபக்தி நிறைந்த வேடுவன் கதையாக இருந்தாலும் அதன் நடையும் புதுவித பார்வையும் அதனைத் தரமான கனதியான கதையாக மாற்றி விட்டிருந்தன. மறுமலர்ச்சிப் பத்திரிகையில் இவர் எழுதிய தெருக்கீதம், ஆலமரம் என்ற இரு கதைகள் வெளிவந்தன. இக்கதைகள் இக் கலைஞரின் ஆற்றல் மிகு எழுத்தை புடம் போட்டுக் காட்டின.

இவர் ”சிந்திக்கத் தொடங்கினான்”, ”எனக்கும் உனக்கும்”, ”தெரிந்தால் போதும்”, ”தாய்” ஆகிய சிறுகதைகளைப் புதினம் பத்திரிகையில் எழுதியுள்ளார். ”குருவின் சதி” என்ற முற்கூறப்பட்ட இவரின் சிறுகதை ஈழத்தின் மூத்த படைப்பாளி வரதரின்ஆனந்தன்” சஞ்சிகையில் வெளிவந்தது. இச்சிறுகதையானது முதலில் கல்கியில் வெளிவந்ததாக அறியப்படுகிறது. இவற்றினை விட ஊமை நாடகம், ஓடமும் வண்டியும், வண்டிக்காரன், நினைவுமுகம், வற்றாத ஊற்று, ஷேட், சைக்கிள் சக்கரம் முதலான சிறுகதைகளையும் சபாரத்தினம் அவர்கள் எழுதியுள்ளார். காலத்திற்கேற்ப சமூகப் பார்வையும் முன்வைத்து இவரது கதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. இவரின் சிறுகதைகளின் தொகுப்பாக ”புதுவாழ்வு” நூலுருவில் வெளிவந்தது.

By -‘[googleplusauthor]’

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345