திருநீற்றுக்குடுவை – பழஞ்சைவத்தமிழ் பண்பாட்டின் ஒரு அங்கம்

திருநீற்றுக்குடுவை

இது தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த ஒரு பாத்திரமாகும். பொதுவாக இந்துக்கள் திருநீறு அணிவதை தமது வாழ்வியல் கோலத்தில் மிக உன்னிப்பாகக் கடைப்பிடித்தனர். “ நீறில்லா நெற்றி பாழ் ” எனும் பழமொழியிலிருந்து இதனை நன்குணரலாம். அதற்குப் பயன்படுத்தப்படும் திருநீற்றை சேமித்து வைப்பதற்காக தென்னஞ் சிரட்டையில் தயாரிக்கப்படும் ஓர் எளிய முறையிலான ஓர் கொள்கலனே திருநீற்றுக்குடுவை என அழைக்கப்படுகின்றது.
தேங்காயினை உரித்து அதன் மேற்பகுதியில் கால்வாசியை நீக்கி அதன் உள்ளடைகளை நீக்கிவிட்டு, தேங்காயின் கண்ணை துழைத்து அதன் ஊடாக சிறு கயிறு ஒன்றினை இட்டு கட்டி விடுதல். அதனுள்ளே திருநீற்றினை இட்டு வைப்பர்.

பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும், செலவற்றவையாகவும், இலகுவானவையாகவும் காணப்படும்.

இன்று தகரம் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை வந்து விட்டதால் இது வழக்கத்திலிருந்து மறைந்து விட்டது. ஆனாலும் இன்றும் கிராமப்புற சிறிய ஆலயங்களில் இவ்வாறான திருநீற்றுக்குடுவை காணப்படுகின்றது.

இயற்கையான இந்தத் தயாரிப்பு ஆரோக்கியமாகவும் இயற்கையை நேசிப்பவர்களுக்கு ஒரு கலைநயமாகவும் திகழுகின்றது. தற்போது சிரட்டைகளில் பல்வேறு கைவினைப்பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு காணப்படுகிறது.

பாதிச்சிரட்டையை எடுத்து வெளிப்புறமுள்ள தும்புகளை வடிவாக சுரண்டி அகற்றி உட்புறமும் அதேபோல் செய்து வைத்திருப்பார்கள். மதிய நேரங்களில் வடிக்கப்படும் கஞ்சியை சிறிது வெங்காயம், மிளகாய், கொஞ்சம் உப்பு, சிறிதளவு தேங்காய் பாலும் சேர்த்து அதனுள் ஒரு கைப்பிடி சோறும் சேர்த்து சிரட்டையில் குடிக்கும் சுகமே தனிதான். தேநீர் அருந்துவதற்கும் பாவிக்கப்பட்டது. சுடச்சுட தேநீர் சாயத்துடன் பனங்கட்டி கடித்துக் கொண்டோ அல்லது சர்க்கரையுடனோ குடிப்பது மனதுக்கும் உடலுக்கும் இதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்பிடி இயற்கையுடன் ஒன்றிய பழந்தமிழர் வாழ்வியல் மறக்கப்பட்டதால் பல்வேறு நோய் நொடிகளுக்கு ஆட்பட்டு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

திருநீற்றுக்குடுவை
திருநீற்றுக்குடுவை

நன்றி – தகவல் மூலம் – muthusom.com இணையம். This is known as an ancient vessel of Tamils. Hindus use Thiruneeru (Holy Ash made of cowdung) in their livelihood patterns. There is a proverb which says ‘A forehead without the holy ash means nothing’. Thiruneer Kuduwai is structured for keeping holy ash and it is made of coconut shell.

It is made by peeling the coconut husk of a whole coconut and cutting ¼ of the upper shell. Then makes the holes with coconut eye and hang over with a string. Inner part of the coconut is removed and filled up with holy ash. The beauty of the Thiruneer Kuduwai is its cheaper, simple and easy to handle.

The influences of the tin and plastic make a significant change in our lives. Still we can see this Thiruneer Kuduwai in the temples of rural areas. Currently there are so many products are made out of coconut shells and they are sold in shopping centers. These products are the art of nature- lover and very healthiest products without any harmfulness to the human beings.

Former days the people used half coconut shell as a drinking cup. They finely clean the coconut shell in and out and used to drink the strained juicy water from steaming rice. They add onion, chilli, a pinch of salt and add coconut milk to get a delicious drink. In addition to that they add some steamed rice to make the drink perfect for noon time. If the said juice is drunken in a coconut it tastes superb. Apart from this rice juice warmest plain tea with jaggery or palm jaggery also very healthy and tasteful too. We have forgotten the healthiest habit which our forefathers in. That’s why we all end up with visiting the doctors regularly and left out with many diseases.

திருநீற்றுக்குடுவை

நன்றி – தகவல் மூலம் – muthusom.com இணையம்.

Sharing is caring!

4 reviews on “திருநீற்றுக்குடுவை – பழஞ்சைவத்தமிழ் பண்பாட்டின் ஒரு அங்கம்”

 1. mahiram says:

  hello iam mahiram from france thanks a lot for sharing informations about jaffna
  and please update these things on your page
  1 traditional medicin
  2 traditional weapons
  3 traditional foods
  4 traditional martial arts sports
  5 traditional musical instruments

  please that will be helpful

 2. நன்றி. நிச்சயம் எதிர்காலத்தில் எல்லாம் நிறைவேற்றப்படும்

 3. தங்களது முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மாட்டுவண்டிகள் பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எனக்கு மிகவும் பயனளித்தது.மிக்க நன்றி.

 4. தங்களின் கருத்திற்கு நன்றி.

Add your review

12345