தும்பளை புனித மரியன்னை ஆலயம்

இவ்வாலயம் பருத்தித்துறைப் பகுதியில் மிகப் பமையானதென நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய “ 25 இயர்ஸ் கத்தோலிக் பிறஸ்” (1893-1918) என்ற நூலில் (பக்208) குறிப்பிடுகிறார். இவ்வாலயம் ஒல்லாந்தர் காலத்தில் கொட்டிலாக கட்டப்பட்டிருந்தது பற்றி ஏற்கனவே இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கோயில் பற்றி நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மேலும் குறிப்பிடுவதாவது “ பழைய கோவில் மிகவும் பள்ளமான காணியிலேயே கட்டப்பட்டிருந்தது” இக்கோவில் இருந்த காணியின் பெயர் “மாவச்சை” ஆகும். இக்காணி மிகவும் பள்ளமாக இருந்தமையால் இங்குள்ள மாதாவை பள்ளத்து மாதா என அழைத்தனர் என மறைந்த முன்னாள் அதிபர் திரு. தொம்மையப்பிள்ளை செபமாலை ( 1930-2007) குறிப்பிட்டார். மாரியில் வெள்ளம் தேங்குவதால் புதிய மேட்டுநில காணியோன்று பழைய மாதா கோவிலுக்கு தெற்கே எடுக்கப்பட்டது. இக்கோயிலுக்கான மூலைக்கல் 1880 ம் ஆண்டு மறைந்த அருட்பணி சார்ள்ஸ் ஹெக்ரர் மௌறோயிற் இடப்பட்டு 1900 ல் பூர்த்தியாக்கப்பட்டது. வருடார்ந்த திருவிழா நவம்பர் மாதம் 29 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 8ம் திகதி முடிவடைகிறது.

Sharing is caring!

1 review on “தும்பளை புனித மரியன்னை ஆலயம்”

Add your review

12345