பண்டாரக்குளம்

[:ta]

நல்லூர் இராஐதானியில் பண்டாரக்குளம் ஒரு முக்கியமான குடியிருப்பாக விளங்கியது. தோம்புப் பொறிப்பில் பண்டாரக்குளம் ஒரு குறிச்சிப் பெயராகவே காணப்படுகின்றது. தற்போதுள்ள சங்கிலியன் வீதிக்கண்மித்த வகையில் பண்டாரக்குளம் காணப்படுகின்றது. 1985ஆம் ஆண்டில் பண்டாரக்குளத்தடியில் குழி ஒன்று தோண்டிய போது ஓர் அரச உத்தியோகத்தரது முத்திரை மோதிரம் ஒன்று கிடைக்கப்பெற்றது. காரீயத்தினால் ஆன அம் மோதிரத்தில் 21 சிவத்தகற்கள் பதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பண்டாரக்குளம் என்ற பெயர்த் தோற்றத்திற்கான காரண காரியத் தொடர்பு தெளியாகத் தெரியாவிடினும், பண்டாரம் என்ற சொல் சோழர் காலக்கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இராட்சியத்தில் பண்டாரம் என்பது ஒரு நிர்வாக அதிகாரியைக் குறித்தது எனலாம். திறைசேரிக்காவலர்களையும், கோயிலிலுள்ள அரசையும், அசையாச் சொத்துக்களை வைத்துப் பராமரிப்பவர்களையும் பண்டாரத்தார் எனக் குறிப்பிடுவர். ‘கோயிற்பண்டாரங்கள்’ போர்த்துக்கேயருடைய கலையழிவுக் கொள்கையிலிருந்து கோவில்களுக்குரிய ஆவணங்களையும், விக்கிரகங்களையும் பாதுகாத்துக் கொண்டனர் என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. எனவே பண்டாரக்குளம் என்பது கோயில் பண்டாரத்துடன் தொடர்புபட்ட நிர்வாகிகள் ஒன்றாக வாழ்ந்த கிராமமொன்றுக்கு இடப்பட்ட பெயராக அமையலாம். பண்டாரமாளிகை, பண்ணாகம், பண்டாரத்தரிப்பு (பண்டத்தரிப்பு) ஆகிய இடப்பெயர்களும் பண்டாரத்தார்களுடன் தொடர்புபட்ட மையங்களாகும்.

[:en]நல்லூர் இராஐதானியில் பண்டாரக்குளம் ஒரு முக்கியமான குடியிருப்பாக விளங்கியது. தோம்புப் பொறிப்பில் பண்டாரக்குளம் ஒரு குறிச்சிப் பெயராகவே காணப்படுகின்றது. தற்போதுள்ள சங்கிலியன் வீதிக்கண்மித்த வகையில் பண்டாரக்குளம் காணப்படுகின்றது. 1985ஆம் ஆண்டில் பண்டாரக்குளத்தடியில் குழி ஒன்று தோண்டிய போது ஓர் அரச உத்தியோகத்தரது முத்திரை மோதிரம் ஒன்று கிடைக்கப்பெற்றது. காரீயத்தினால் ஆன அம் மோதிரத்தில் 21 சிவத்தகற்கள் பதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பண்டாரக்குளம் என்ற பெயர்த் தோற்றத்திற்கான காரண காரியத் தொடர்பு தெளியாகத் தெரியாவிடினும், பண்டாரம் என்ற சொல் சோழர் காலக்கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இராட்சியத்தில் பண்டாரம் என்பது ஒரு நிர்வாக அதிகாரியைக் குறித்தது எனலாம். திறைசேரிக்காவலர்களையும், கோயிலிலுள்ள அரசையும், அசையாச் சொத்துக்களை வைத்துப் பராமரிப்பவர்களையும் பண்டாரத்தார் எனக் குறிப்பிடுவர். ‘கோயிற்பண்டாரங்கள்’ போர்த்துக்கேயருடைய கலையழிவுக் கொள்கையிலிருந்து கோவில்களுக்குரிய ஆவணங்களையும், விக்கிரகங்களையும் பாதுகாத்துக் கொண்டனர் என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. எனவே பண்டாரக்குளம் என்பது கோயில் பண்டாரத்துடன் தொடர்புபட்ட நிர்வாகிகள் ஒன்றாக வாழ்ந்த கிராமமொன்றுக்கு இடப்பட்ட பெயராக அமையலாம். பண்டாரமாளிகை, பண்ணாகம், பண்டாரத்தரிப்பு (பண்டத்தரிப்பு) ஆகிய இடப்பெயர்களும் பண்டாரத்தார்களுடன் தொடர்புபட்ட மையங்களாகும்.[:]

Sharing is caring!

Add your review

12345