பண்டிதர்.சபா ஆனந்தர்.B.A

சபாவதி என்பவரின் தவப்பயனாக இணுவில் கிழக்கிலே வேளாண்மை குலத்திலே வந்துதித்தவரே சபா ஆனந்தர்.
சிறுவயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் குடும்ப நிலைகாரணமாக மேற்படிப்பை தொடரமுடியவில்லை. சரஸ்வதியினது திருவருள் நாவிலே குடிகொண்டமையால் கல்வியிலும் சாதனைகளிலும் திறம்பட முன்னேறினார். பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் இவரும் ஒருவராவர். ஆங்கிலத்திலும் அதேயளவு புலமை இருந்தது. கலைமாணிப் பட்டதாரியான இவர் தமிழ் இலக்கியத்தின் திறமை காரணமாக B.O.L பட்டத்தைப் பெற்றார். சிறந்த பேச்சு வண்மை மிக்கவராகவும் விளங்கினார். தனது பேச்சுத் திறமையால் சில நகைச்சுவையான செய்திகளையும் பேசி மகிழ்வார்.

இவர் பல பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றினார். நயினாதீவு மகாவித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி போன்றனவாம். ஓய்வு பெற்ற நிலையில் தமது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டார். ஆலயங்களில் புராண படணம், சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளையும் நடாத்தி வந்தார். மாணிக்கம் ஆனந்தர் என்பவரும் இணைந்து விளக்கவுரைகளை நிகழ்த்துவார். சிவகாமியம்மன் ஆலய அன்னதான மண்டப அடிக்கல் நாட்டு விழாவிலேயே கூறிய கண்டிப்பான அறிவுரை அறநெறிப்பாடசாலையை உருவாக்கத் தூண்டியது. இவர் தன்னுடைய புதல்வர்களையும் சிறப்பான உயர் நிலைக்குரிய பதவியை வகிக்க கூடிய நிலையிலே ஈடுபடுத்தி சென்றார்.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345