பர்வதவர்த்தனி அம்மன் கோயில்

கிராமத்துக்கு ஒரு அம்மன் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருளியுள்ள இடமும் பரத்தைப்புலமே. வைகாசிப் பூரணையைத் தீர்த்த நாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம். சித்திரத்தேர் சிறப்பானது பங்குனித் திங்களில் பொங்கல் பூசை என்பன நேர்த்தியாக நடைபெறும் நவராத்திரி பூசை அந்தக் காலந்தொட்டே சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்பாளின் மானத்பூத்திருவிழா இந்தக் கிராமத்தில் ஓர் எழுச்சி விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. பர்வதவர்த்தனி அம்பாள் மீது அடியார்கள் தோத்திரங்களைப் பாடியிருக்கின்றார்கள். பர்வதவர்த்தனி அம்பிகை அந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்கள் பாடி அரங்கேற்றியுள்ளார்.

நன்றி – ஆக்கம்- ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

மூலம்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் – 1992

http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345