புங்குடுதீவு

இத்தீவானது நெடுந்தீவிற்கு மிக அண்மையிலுள்ள தீவாகும். நெடுந்தீவு மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்திற்குச் சென்றே தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய தீவுகளுக்கும் செல்கின்றார்கள். இத்தீவின் மக்களுக்கும், நெடுந்தீவு மக்களுக்கும் பரம்பரையான குடும்பத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது. தனிநாயக முதலியும் அவரது பரம்பரையினரும் நெடுந்தீவில் குடியேறிய காலந்தொட்டு இவ்விரு தீவு மக்களுக்குமிடையில் நெருங்கிய குடும்ப உறவுகள் நிலைபெற்று வந்துள்ளது. தமிழகத்திலுள்ள பூங்குடிக்கிராம மக்கள் குடியேறியமையால் பூங்குடியென்றும், அக்காலத்திலே செல்வம் கொழித்திருந்தமையால் பொன்கையூர் என்றும், புங்கை மரங்கள் நிறைந்து காணப்பட்டமையால் புங்குடுதீவு என்றும் அழைக்கப்பட்டதெனவும் கூறுகிறார்கள். இங்குள்ள மக்களில் பலர் இலங்கையின் பல பாகங்களிலும் வர்த்தகத்தில் சிறந்தவர்களாக விளங்கியதோடு ஆங்காங்கே தமது விலாசங்களையும் நிலைநிறுத்தினர். இங்கு பல சைவப் பெரியார்கள், சைவ சமய வளர்ச்சிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் அருந்தொண்டாற்றினர்.

இன்று நெடுந்தீவு செல்லும் மக்கள் யாழ்ப்பாணத்திற்கும், ஏனைய தீவுகளுக்கும் செல்வதற்கு, புங்குடுதீவிலுள்ள குறிகட்டுவான் துறைமுகமே பிரதான துறையாக அமைந்துள்ளது. புங்குடுதீவில் காலத்திற்குக் காலம் பல தமிழ் வளர்த்த பெரியார்களும், தலை சிறந்த கலைஞர்களும், சமூக சேவையாளர்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!

3 reviews on “புங்குடுதீவு”

Add your review

12345