புனித அந்தோனியார் ஆலயம் ஊர்காவற்துறை

புனித அந்தோனியார் ஆலயம் புனித அந்தோனியார் ஆலயம் புனித அந்தோனியார் ஆலயம் புனித அந்தோனியார் ஆலயம்

வரலாற்றுப் பெருமைமிக்க ஊர்காவற்துறையில் பிரித்தானியர் ஆட்சியில் 1820 இல் அமைக்கப்பெற்ற புனித அந்தோனியார் ஆலயம் மகத்தான இடத்தை வகித்துள்ளது. இத்தீவுப் பகுதி முழுவதுக்கும் நடுநிலை மையமாகவும் தலைமைத்துவ இடமாகவும் விளங்கியது. தீவகத்தின் நிர்வாக அலகாகவும் திருச்சபையின் தலைமைப் பீடமாகவும் விளங்கிய இவ்வாலயத்தில் சகல பதிவுகளும் இடம் பெற்றமைக்கான ஆவணங்களும் சுவடித்தொகுப்புக்களும் இன்றும் ஆதாரமாக இருக்கின்றன.
(யோசப்: 1995:24)

டச்சுக்காரரின் ஆட்சியின் முடிவில் ஆங்கிலேயர் மதச்சுதந்திரம் வழங்கியதை அடுத்துப் பல ஆலயங்கள் மீண்டும் உருவாகின. காவலூரில் ஆங்கில ஆட்சியின் தொடக்க காலங்களின் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் புனித தோமையர் ஆலயம் என்று கூறப்படுகின்றது. சுவாமி ஞானப்பிரகாசர் 1932 இல் எழுதிய ‘ஊர்காவற்துறை புனித அந்தோனியார்’ ஆலய வரலாற்றில் இதை குறிப்பிட்டுள்ளார். தற்பொது புனித அந்தோனியார் அலயம் அமைந்துள்ள இடத்திலேயே முந்தைய தோமையர் ஆலய உருவங்கள் அருகிலுள்ள “பாவட்டங்காடு” ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் விறகு வெட்டி ஒருவர் ஒரு மரத்தை தறித்த சமயம் அந்த மரப் பொந்தினுள் பதுவைப்பதியராம்  புனித அந்தோனியார் திருச்சுருபம் இருப்பதைக் கண்டு பங்குத்தந்தையாருக்கு அறிவிக்கவே பங்குக் குருவானவரும் பக்தர்களும் புனித தோமையர் ஆலயத்தை பிரதிஸ்டை செய்து வைத்தனர் என்பது வரலாறு.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345