பெட்டகம்

பெட்டகம்பெட்டகம்

பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வசதி படைத்தவர்களின் வீடுகளில் இதன் பயன்பாடு அதிகம் காணப்பட்டது. முக்கியமான பொருட்களை இதனுள் பூட்டி வைப்பர். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பெட்டகம் பாவனையில் இருந்தது. எங்கள் பெரிய அய்யா வீட்டில் பழைய ஏடுகள் பெட்டகத்திலேயே இருந்தன. நெல் போன்ற தானியங்களை சேமிப்பதற்கும் பெட்டகம் பயன்பட்டது. ஆலயங்களில் காணப்படும் பெட்டகம் அழகான வேலைப்பாடுகளுடன் இருக்கும்.

 

பெட்டகம்
கொத்து

தமிழர்களால் பன்னெடுங்காலம் பயன்படுத்தும் பொருட்களை அளப்பதற்க்கான ஒரு அளவைக் கருவி. நெல், அரிசி, பால் என்பன அளவீடு செய்யப்படும். மரத்திலான கொத்துக்களை நான் பார்த்திருக்கிறேன்.சேனையூரில் எருமைப்பால் காலம் காலமாக கொத்தினாலேயே அளக்கப்பட்டது. வெண்கலத்திலான கொத்தினாலேயே அரிசி அளக்கும் முறையிருந்தது.

நாழி

நெல்லை அளவிடுவது. இது பிரம்பினால் அல்லது பனையோலையால் செய்யப்பட்டதாக இருக்கும். நாழி பற்றி பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் இப்படி கூறுகிறது.

”தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்”

தானியத்தை நாள் தோறும் அளவ்விட்டு உண்னும் முறை கூறப் பட்டுள்ளது.

புறநானூறு

”தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிறழ்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயன் ஈதலே;
துய்பேம் எனினே, தப்பு ந பலவே”

என நாழி பற்றி புறநானூறூ கூறுகிறது.

புசல்

பெட்டகம்

28கொத்து ஒரு புசல். இது மரத்திலானதாக இருக்கும்.

Pettaham

Richest people in the society used Pettaham (Treasure box) to safe things. They saved valuable things in it. It is seen in most of the houses in Jaffna once. There were some books (Former days book pages are made of palmyrah leaf) were kept in one of uncle’s home. Some others save paddy grain in this box. The treasure box in the temple is different from the ones at homes. They were with finest wood carving decorations on it.

 

பெட்டகம்

Koththu [Measurement tool]

Koththu is one of the measuring tools of Tamils from unknown years. It is used to measure paddy grain, rice and milk. I have seen some wooden Koththu. Buffaloes’ milk is measured by the koththu in Senaiyoor. Rice is normally measured in Bronze made koththu.

Nazhili [Measurement tool]

It is a measurement used to measure paddy. It is designed with cane or palmyrah leaf. There are various literary poems given the use of ‘Nazhili’. They emphasize on meaning of a Nazhili is measuring and eating the rice or grains.

Pusal [Measuring tool]

28 koththu = 1 pusal Pusal is a wooden equipment

Sharing is caring!

Add your review

12345