பேராசிரியர் விக்கிரமசிங்கம் அருணாசலம்

பேராசிரியர் விக்கிரமசிங்கம் அருணாசலம் (PhD, M.Sc, B.Sc) மாதகலில் ஆசிரியர்களாக இருந்த விக்கிரமசிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் மகனாவர். 1935இல் பிறந்தார். இவர் இளமைக்கால கல்வியை பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி, சுழிபுரம் விக்றோரியாக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கற்று 1952 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் சிறப்புப் பட்டத்தை உயர்தரத்தில் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக ஒருவருடம் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி 1958 பிற்பகுதியில் அமெரிக்கா சென்றார். அங்கு மாஸ் பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராக சேர்ந்ததுடன் அப் பல்கலைக்கழகத்தில் 1960இல் விஞ்ஞானத்தில் முதுமானிப் (M.Sc Physic) பட்டம் பெற்றார். 1964இல் கலாநிதிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். He specializes in Plasma Physic and Controlled Themonuclear Fusion, Quantum  Electrodynamics and Quantum Theory, Condensed Matter Theory, Non-equilibrium Quantum Statistical Mechanics, Foundations of Physics, Elementary Particle Physics and Cosmology. He is a senior member of the American Physical Society and is a past member of the New York Academy of Sciences and Sigam.

 
பேராசிரியர் விக்கிரமசிங்கம் அருணாசலம்

இதன் பின்னர் பிறின்ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உத்தியோகத்தராக (Research Associate )  சேர்ந்து  இளைப்பாறும் 1996ஆம் ஆண்டுவரை கடமையாற்றினர். அங்கு பௌதீக ஆய்வாளராகி பின் முதல்நிலை பௌதீக ஆய்வாளரானார். பேராசிரியர் அருணாசலம் பௌதீகவியலாளர், ஆய்வாளர் கல்வியாளர், இணை ஆசிரியர் (Editor) என கௌரவிக்கப்பட்டார். இவர் தனித்தும் சேர்ந்தும் 106 ஆய்வுக் கட்டுரைகளை புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இவரின் திறமை காரணமாக ஆய்வு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களின் சிறப்பு சொற்பொழிவுகள் மேற்கொள்ள அழைக்கப்பட்டார். 1978 அமெரிக்க பௌதீகவியல் சங்கத்தின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். பின் சிரேஸ்ட அங்கத்தவராக செயல்பட்டார். 1992 பௌதிகவியல் கட்டுரைகளின் இணை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டார். பௌதீகவியல் சம்பந்தமான பல நூல்கள் வெளிவருவதற்கு அடிப்படை பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இவரின் ஆராய்சியின் சிறப்பு காரணமாக இவர் பெயர் நாடுகளின் சர்வதேச சுயசரிதை அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. உதாரணத்திற்கு ஒன்று உயரிய அமெரிக்கர்கள் ஆயிரம் என்ற நூலில் இவர் பெயர் உள்ளது. அமெரிக்காவிலும் உலகிலும் வில்லியென அறியப்பட்ட இவர் 2011 இல் இறைபதம் எய்தினர்.

 

Sharing is caring!

Add your review

12345