மயிலிட்டி கண்ணகி அம்பாள்

மயிலிட்டி கண்ணகி அம்பாள் ஆலய வரலாறு.

மயிலிட்டி கண்ணகி அம்பாள்

மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் தொன்மையும் தோற்றமும்

இந்து சமுத்திரத்தின் எழில் முத்தென விளங்கும் ஈழமணித் திருநாடு இயற்கை அன்னையின் இனிய கொடையாக வளம் பல கொழித்துச் சிறப்புற்று விளங்குகின்றது. ஆர்த்தெழும் அலைகடல் சூழ்ந்து தரும் கடல் வளமும் விண்ணளாவி நிமிர்ந்து நிற்கும் மலைவளமும் பூமித்தாய் மனம் களித்துதவும் நிலவளமும் கொழித்து விளங்கி சிறப்பு பெற்று விளங்குகின்றது. இராவணணேஸ்வரனின் நவகோடி சிவலிங்கப் பிரதிஷ்டையால் சிவபூமியென சிறப்புப் பெற்று விளங்கும் ஈழமணித் திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் செழித்து செந்தமிழின் நாடாகவும் சைவத்தின் இருப்பிடமாகவும் விளங்குவது யாழ்ப்பாணம்.

மயிலிட்டி கிராமம்

மயிலிட்டி என்னும் கிராமம் இயற்கை எழில் நிறைந்த சிற்றூர். கிழக்கே பலாலி வடக்கே அலைகடல் மேற்கே தையிட்டி தெற்கே கட்டுவன் என்பதாக அதன் எல்லைகள் அமைந்திருந்தன. உபதபாலகம் வைத்தியசாலை என்பவற்றோடு கலைமகள் மகா வித்தியாலயம், றோ.க.பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளும் அமையப்பெற்று நிறைவு பெற்ற கிராமமாக விளங்கியது மயிலிட்டி. கடல் தரும் வளமும் மண் வளமும் மிகுந்து விளங்கியமையால் அங்கு வாழ்ந்த மக்கள் குறைவின்றி திருப்திகரமான வாழ்வை வாழ்ந்தனர். ஆலயங்கள் பல நிறைந்து விளங்கின. மயிலிட்டி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம் , மயிலிட்டி முருகமூர்த்தி ஆலயம், மருதடி விநாயகர் ஆலயம், தோப்புப்பிள்ளையார் ஆலயம், கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம் போன்ற பல ஆலயங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவின.

மயிலிட்டி கண்ணகி அம்பாள்

ஆலய வழிபாட்டுடன் இந்தியத் திருத்தலங்களை வழிபடுவதிலும் கதிர்காம யாத்திரை சென்று கதிர்காமக் கந்தனை வழிபடுவதிலும் தொண்டமனாற்றங் கரையுறையும் செல்வச்சந்நிதி கந்தனை வழிபடுவதிலும் ஆர்வம் கொண்டவர்களாக காணப்பட்ட மயிலிட்டி வாழ் மக்கள் தம் குலதெய்வமாகிய கண்ணகி அம்பிகை மீது அளவிறந்த பக்தி கொண்டவர்கள். கண்ணகி அம்பாள் வழிபாடு இந்தியாவின் சேர நாட்டிலிருந்து  1ம் கஐபாகு மன்னனால் கி.பி 2ம் நூற்றாண்டு காலத்தில் கொண்டு வரப்பட்டது. கி.பி 1250 -1505 காலங்களில் அதாவது பொலநறுவை காலத்திற்கும் போர்த்துக்கேசரின் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கற்பிட்டியில் நாச்சியம்மன் கோயில், நிக்கரவட்டிய கண்ணகை அம்மன் கோயில் , குண்டசாலை கண்ணகை அம்மன் கோயில், குருநாகல் கண்ணகி அம்மன் கோயில் போன்றன காணப்பட்டமைக்கான சான்றுகள் சவுல் சந்தேசிய பிரபந்தங்களில் கூறப்பட்டுள்ளன.

6ம் புவனேகபாகுவின் (செண்பகப்பெருமாள்) கடற்படை வீரர்கள் மூவர்

ஈழமணி நாட்டின் நல்லைநகர் பண்டைத்தமிழரின் தலைநகராக விளங்கிய காலத்தில் நல்லைநகரில் இராசதானி அமைத்து அரசாண்ட மன்னன் 6ம் புவனேகபாகு என்கிற செண்பகப்பெருமாள். அவரது ஆட்சிக்காலத்தில் சைவசமயம் எழுச்சிபெற்றிருந்ததை எமது வரலாற்றுத் தரவுகள் மூலம் அறிய முடிகின்றது. அவரது ஆட்சிக்காலத்தில் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்குடன் போரிற் சிறந்து விளங்கிய சகோதரர்கள் மூவரான வீரமாணிக்கதேவன் , பெரிய நாட்டுத்தேவன் , நரசிங்கதேவன் ஆகிய மூவரையும் தெரிவு செய்து அவர்களிடம் வட கடற்பிரதேசத்தின் பாதுகாப்புப் பொறுப்புக்களை கையளித்தார். இம் மூன்று சகோதரர்களும் தத்தமது குடும்பத்தாருடனும் தமக்கு கீழுள்ள படையினருடனும் குடியேறிய இடங்களே வீரமாணிக்கதேவன்துறை,  பெரியநாட்டுத்தேவன்துறை, நரசிங்கதேவன்துறை என்று அழைக்ககப்பட்ட பிரதேசங்களாகும். இம்மூன்று பிரதேசங்களும் ஒன்றாக மயிலிட்டி என அழைக்கப்பட்டது. இம்மூன்று வீரர்களும் போரில் வல்லவர்களாக இருந்தது மட்டுமின்றி, மிகுந்த சைவப்பற்றுடையவர்களாகவும், கொடையாளிகளாகவும் வாழ்ந்ததுடன் குறு நில மன்னர்களாகவே கருதப்பட்டும் போற்றப்பட்டும் வந்தனர். அவர்களது பெயர்களில் மிகப்பெரிய பிரதேசமே வழங்கப்பட்டு ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அம்மூவரும் குடியேறிய இடங்களில் ஆலயங்கள், பாடசாலைகள், வைத்திய நிலையங்கள், விளையாட்டுமைதானங்கள் என்பவற்றை அமைத்து மைதானங்களில் (அக்காலத்தில்) போர்ப்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்தனர். வீரமாணிக்கதேவனால் அமைக்கப்பட்ட விநாயகர் ஆலயம் “மகா கணபதி ஆலயம் அல்லது தோப்புப் பிள்ளையார்ஆலயம்”எனவும் பெரியநாட்டுத்தேவனால்  அமைக்கப்பட்ட ஆலயம் (மருதமரத்தின் கீழ் அமைக்கப்பட்டதால்)“மருதடி விநாயகர் ஆலயம்” எனவும் நரசிம்மதேவனால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் “கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம்” எனவும் அழைக்கப்பட்டு வந்தன.

தோப்புப்பிள்ளையார் ஆலயம்

இவ்வாறாக வீரமாணிக்கதேவனால் ஸ்தாபிக்கப்பட்ட தோப்புப்பிள்ளையார் ஆலயத்தினை  பரிபாலித்து வருவதற்கு தனது குழாத்தில் மிகவும் ஆசாரசீலரும் பக்திமானுமாகிய ஒருவரை நியமித்து பூஜைகள் ஒழுங்காகச் செய்யப்பட்டு வந்தன. இப்பூசாரி பரம்பரையினரே தொடர்ந்தும் இவ்வாலயத்தை பரிபாலித்து வந்தனர். இப் பரம்பரையினரின் பெயரிலேயே ஆலயத்தின் உறுதிகளும் பரம்பரை பரம்பரையாக மாற்றப்பட்டு வந்தது. ஓல்லாந்தர் காலத்தில்  “தோம்பு” என்றழைக்கப்பட்ட காணிப்பதிவுகளில் “வீரமாணிக்கதேவன்துறை” என்றே பதியப்பட்டிருந்தன. இன்னும் எமது ஆலய உறுதிகளில் “வீரமாணிக்கதேவன்துறை இறை” என்றே பதியப்பட்டுள்ளது.

பழைய ஆலயம் – தேவியார் கொல்லை ஆலயம்

மயிலிட்டி கண்ணகி அம்பாள்

நரசிங்கதேவன் புலத்தில் ஓர் கண்ணகை அம்பாள் ஆலயமும் அமைந்திருந்தது. இதன் தோற்றம் பற்றிய காலம் தெரியவில்லை. அவ்விடம் தேவியார் கொல்லை எனவும் அவ்வாலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட திருக்குளம் “தேவிகுளம்” எனவும் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாலயத்திற்கும் இப்பூசாரியினரே மிகவும் பக்தி சிரத்தையுடன் பூஜைகள் செய்து வந்தனர். இக்கோயிலின் சிதைவுகள் இன்றும் மயிலிட்டியில் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கையில் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக கண்ணகை அம்பாள் ஆலயக் கதவுகள் பூட்டப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் வீரமாணிக்கதேவன்துறை வாசிகள் கவலையுற்றவர்களாய் வாழ்ந்து வரும் வேளையில் அவர்களது தொழில் வளம் குன்றத் தொடங்கியதுடன் நோய்களும் பரவ ஆரம்பித்தன. இப்பூசாரி பரம்பரையைச் சேர்ந்தவர் கந்தர். இவரது மகன் காசிப்பிள்ளை. கந்தர் சிறிது காலத்தின் பின் இல்லற வாழ்வைத் துறந்து ஆலயத்திலே தங்கியிருந்து இறை தொண்டில் ஈடுபட்டார். பூஜைக்கு படைத்த உணவையே ஒருநேர உணவாக உட்கொண்டு வந்தார். கதிர்காமத்துக்கு செல்ல வேண்டும் என எல்லோருக்கும் கூறுவார். திடீரென ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாது கதிர்காமத்திற்கு சென்று விட்டார். எல்லோரும் தேடிக் கைவிட்ட நிலையில் கதிர்காம உற்சவம் நடைபெறும் வேளையில் கந்தனை தரிசிக்க சென்ற ஊரவர்கள் அவரைக்கண்டு தங்களுடன் ஊருக்கு வருமாறு அழைத்தபோது  “இதுதான் எனது சொந்தஊர்” எனக்கூறி அங்கேயே தங்கி முருகபதம் அடைந்தார். இவ்வாறு சிறந்த பக்திமானாக விளங்கிய கந்தரின் பேரனாகிய வயிரவநாத ஐயர் பரம்பரையினர் கண்ணகை அம்பாளிடமும் பக்திகொண்டவர்கள்.

புதிய ஆலயத்தின் தோற்றம்

மயிலிட்டி கண்ணகி அம்பாள்

இக்காலத்தில் கந்தரின் மகன் காசிப்பிள்ளை ஓர் கனவு கண்டார்.  தாம் பூஜை செய்யும் தோப்புப்பிள்ளையார் ஆலயத்தின் வடகீழ்த்திசையில் கடற்கரையோரத்தை அடுத்த புன்னைமர நிழலின் கீழ் (தற்போது கண்ணகி அம்மன் ஆலயத்தின் தல விருட்சமாக உள்ள புன்னை மரம்) ஓர் அழகிய தெய்வீகப் பெண்மணி கையில் சிலம்புடன் நின்று “நான் இம்மரத்தடியில் தங்கப்போகிறேன்” என்று கூற திடுக்குற்று கண்விழித்தெழுந்த காசிப்பிள்ளை குறித்த புன்னை மரத்தடியை அணுகினார். என்னே அற்புதம்! அப்பெரிய புன்னைமரத்தின் நிழலில் ஓர் காலடிச்சுவடும் சிலம்பின் சுவடும்  ஆழப்பதிந்திருந்தது. காற்றுவீசும் கடற்கரையருகே வெண்மணற்பரப்பில் மிகவும் துல்லியமாகத் தெரிந்த காலடிச் சுவடுகளைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் புளகாங்கிதமும் பக்தி பரவசமும் அடைந்த அவர் அவ்வதிசயத்தை ஊர் மக்களுக்கு எடுத்தியம்பி புன்னைமர நிழலில் பொங்கல் பொங்கி அம்பாளை வழிபட்டு அவ்விடத்தில் கண்ணகி சிலையொன்றையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலானார்.  இச்சிலை முன்பு கதவடைக்கப்பட்ட தேவியார் கொல்லை தேவி கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறே எமது தற்போதுள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தின் ஸ்தாபிதம் ஆரம்பமாகியது. பிள்ளையார் கோவில்  பூசகர் பரம்பரையினரே இவ்வாலய பூஜைப்பொறுப்பையும் ஏற்று பக்தி சிரத்தையுடன் நடாத்தி வந்தனர்.

இவ்வாறு மயிலை வீரமாணிக்கதேவன் துறையில் வீரமாணிக்கதேவன் பரம்பரையினரான கந்தன் மகன் காசிப்பிள்ளை அவரைத் தொடர்ந்து வைரவநாதர் (இப்பெயர் இவரது பேரன் வழியாக ஒவ்வொரு பேரனுக்கும் சூட்டப்பட்டு வந்துள்ளது. அவ்வழியில்  பூஜையுரிமை பெற்றவரும் பிரதான பூசகராகவும் ஆலய உரிமையாளர்களில் ஒருவருமாக விளங்கிய காலஞ்சென்ற சிவஸ்ரீ இ.நவமணி ஐயா (அவர்களின் இயற்பெயரும் வைரவநாதர் ஆகும்) என்போர் பூஜைப் பொறுப்பேற்று சிறப்பாக செயற்பட்டனர். சிறுகொட்டிலாக ஆரம்பிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம் காலப்போக்கில் சுண்ணாம்புக் கட்டடமாக பரிணமித்தது. இன்றும் வீரமாணிக்கதேவனால் அமைக்கப்பட்ட தோப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கண்ணகை அம்மன் கோயிலின் முதல் வணக்கத்திற்குரிய பிள்ளையார் ஆலயமாக மகா கணபதி ஆலயம் (தோப்புப் பிள்ளையார்) விளங்குவதுடன் அம்பாளின் பரிவார மூர்த்தியாகவும் போற்றப்பட்டு வருகின்றது.

கண்ணகை அம்பாள் ஆலயம் மூலஸ்தானம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம், மடைப்பள்ளி என்பவற்றுடன் ஆலயத்தின் தெற்கு வீதியில் தீர்த்தகேணி ஒன்றும் கொண்டதாக மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புக்களைப் பெற்றுத் திகழ்ந்தது. அதுமட்டுமின்றி அம்பாளுடன் சிவன், விநாயகர், முருகன் போன்ற பரிவாரமூர்த்திகளுக்கும் தனித்தனி கட்டுத்தேர்கள் அமைக்கப்பட்டு பஞ்சரத பவனி இடம்பெற்று வந்தது. (இது நாளடைவில் பழுதடைந்து விட்டது) ஆனித் திங்களில் தீர்த்தோற்சவமும் அதற்கு முந்திய 10 நாட்களில் அலங்காரத் திருவிழாவும் இரதோற்சவமும் நடந்து வந்தது. வைகாசி விசாகத்தில் வருடப்பொங்கலும் குளிர்த்தி விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன.

1958 ம் வருட காலங்களில்….  

காலங்கடந்து பல தலைமுறைகளைக் கண்ட எமது கண்ணகாதேவி ஆலயத்தின் தலவிருட்சமாக விளங்கி வந்த பாரிய புன்னைமரம் இக்காலத்தில் புயல்காற்றினால் வேரோடு சாய்க்கப்பட்டது. அத்துடன் ஆலயக் கட்டடங்களிலும் ஆங்காங்கே வெடிப்புக்கள் எற்படத் தொடங்கியிருந்தன. இக்கோவிலை புதிதாக நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த பூசகர்களாக இருந்த சிவத்திரு நவமணி ஐயா (இயற்பெயர் வைரவநாதர்) அவர்களும் அவர்களது மைத்துனருமான ஆனந்தசிவம் ஐயா அவர்களும் கலந்தாலோசித்து அடியார்களின் ஒத்துழைப்புடன் 1958ம் ஆண்டு அடிக்கல் நாட்டுவதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து குன்றக்குடி மஹாசந்நிதானத்தின் அடிகளார் தவத்திரு அருணாசல தேசிகரை அழைக்க அவரும் அன்புடனும் பக்தி சிரத்தையுடனும் வருகை தந்து அம்பிகைக்கு அடிக்கல் நாட்டினார்கள். அப்போது அவருக்கு மனக்கண்ணில் ஒரு காட்சி தென்பட்டாதாகக் கூறினார். அக்காட்சியாவது கன்னியாகுமரி தெய்வம் கடல் அலைகளில் நின்று தனக்கு ஆசி வழங்குவது ஆகும் என்று அவர் ஆசியுரை வழங்கும் போது கூறினார்;. அதைத் தொடர்ந்து ஆலயத்தின் மூலஸ்தானம்;, மகாமண்டபம், அர்த்தமண்டபம், சபாமண்டபம் என்பன கருங்கல்லாலும் மற்றும் தரிசனமண்டபம் (இது எமது தந்தையார் சிவஸ்ரீ இ.நவமணி ஐயா அவர்களின் தனிச்செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இது சீலிங் வேலையுடன் கண்கவர்  அலங்கார வடிவங்கள் தீட்டப்பட்டு அடியவர்கள் ஆனந்தமாக நின்று வழிபடக்கூடியவாறு அமைக்கப்பட்டது) வசந்தமண்டபம், வைரவர்மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், அன்னதானமண்டபம் என்பன சிமெந்து கற்களாலும் அமைக்கப்பட்டு உள்வீதி, மகாமண்டபம் என்பன சிற்பவேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் அலங்காரமாக கட்டப்பட்டது. தூபியை நிர்மாணிப்பதற்கென இந்தியாவிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு  அழகிய சிற்பவேலைப்பாடுகளுடனும் கலையம்சத்துடனும் அழகாக அமைக்கப்பட்டு 1962 ம் ஆண்டு ஆனிமாதத்தில் வேதாகமவிதிப்படி சைவக்குருமார்களால் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

1962 ம் வருடங்களில்….

அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகத்தை தொடர்ந்து 40 தினங்கள் மண்டலாபிஷேகமும்நிகழ்த்தப்பட்டு பூர்த்தி தினத்தில் 1008 சங்குகளில் சங்காபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றன. விஷேடபூஜைகளுடன் மாலையில் அம்பிகை அழகிய பூந்தண்டிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.    அம்பிகை மீது கொண்ட பக்திபெருக்கின் நிமிர்த்தம் திரு.துரைராசா குடும்பத்தினர் சங்காபிஷேகத்தைஇ நாம் 1990 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வரும்வரை மிகச்சிறப்பாக செய்து வந்தனர். தொடர்ந்தும் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு , உள்வீதி சீமெந்து தரையாகவும், சுற்றுமதில், புதிய வசந்தமண்டபம், கே.வீ.துரைச்சாமிஎனும் தனி அடியவரால் கட்டப்பட்ட 3 தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் என்பனவும் அழகுற அமைக்கப்பட்டு அம்பிகையின் ஆலயம் ராஜகம்பீரத்துடன் மிளிர்ந்தது. அம்பிகையின் அருளாட்சியும் அவளது அருட்கடாட்சமும், அவளது புகழும் பெருகி ஊர்மக்கள் அனைவரும் மட்டுமன்றி யாழ் குடா நாட்டின் பல கிராம மக்களும் கூட வந்து அன்னையின் உற்சவங்களில் கலந்து அவளது அருளாசியைப் பெற்றுச் சென்றனர். இதன்பின்னர் ஊர்மக்கள் திருப்பணிச்சபை ஒன்றை நிறுவி திருப்பணிகளில் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டனர். திரு. இலங்கைநாயகம் அவர்கள் திருப்பணிச்சபையின் ஆரம்ப கால தலைவராகவும் பின்வந்த காலங்களில் திரு.இராசாதலைவர் பதவியிலும் இருந்து பெருந்தொண்டுகள் செய்துவந்தனர். ஆலயத்தொண்டுகளில் மிகவும் ஈடுபட்டவரான சிவஸ்ரீ இ.நவமணி ஐயா தன்னைப்போன்று தனது வருங்கால சந்ததியினரான தனது புதல்வர், புதல்விகளையும் பக்திநெறி நிற்க வைத்து ஆசாரசீலர்களாக வாழவைத்தார். அவ்வாறே ஊர்மக்களும் பக்திநெறி நின்று அம்பிகைக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதில் பிடிமானம் உள்ளரவாய் வாழ்ந்து வந்தார். நவமணி ஜயா அவரின் முழுமையான முயற்சியினால் அம்பிகையின் ஆலயம் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது.

1958 ம் வருட காலங்களில்….  

காலங்கடந்து பல தலைமுறைகளைக் கண்ட இக் கண்ணகாதேவி ஆலயத்தின் தலவிருட்சமாக விளங்கி வந்த பாரிய புன்னைமரம் இக்காலத்தில் புயல்காற்றினால் வேரோடு சாய்க்கப்பட்டது. அத்துடன் ஆலயக் கட்டடங்களிலும் ஆங்காங்கே வெடிப்புக்கள் எற்படத் தொடங்கியிருந்தன. இக்கோவிலை புதிதாக நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த பூசகர்களாக இருந்த சிவத்திரு நவமணி ஐயா (இயற்பெயர் வைரவநாதர்) அவர்களும் அவர்களது மைத்துனருமான ஆனந்தசிவம் ஐயா அவர்களும் கலந்தாலோசித்து அடியார்களின் ஒத்துழைப்புடன் 1958ம் ஆண்டு அடிக்கல் நாட்டுவதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து குன்றக்குடி மஹாசந்நிதானத்தின் அடிகளார் தவத்திரு அருணாசல தேசிகரை அழைக்க அவரும் அன்புடனும் பக்தி சிரத்தையுடனும் வருகை தந்து அம்பிகைக்கு அடிக்கல் நாட்டினார்கள். அப்போது அவருக்கு மனக்கண்ணில் ஒரு காட்சி தென்பட்டாதாகக் கூறினார். அக்காட்சியாவது கன்னியாகுமரி தெய்வம் கடல் அலைகளில் நின்று தனக்கு ஆசி வழங்குவது ஆகும் என்று அவர் ஆசியுரை வழங்கும் போது கூறினார். அதைத் தொடர்ந்து ஆலயத்தின் மூலஸ்தானம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், சபாமண்டபம் என்பன கருங்கல்லாலும் மற்றும் தரிசனமண்டபம் (சிவஸ்ரீ இ.நவமணி ஐயா அவர்களின் தனிச்செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இது சீலிங் வேலையுடன் கண்கவர்  அலங்கார வடிவங்கள் தீட்டப்பட்டு அடியவர்கள் ஆனந்தமாக நின்று வழிபடக்கூடியவாறு அமைக்கப்பட்டது) வசந்தமண்டபம், வைரவர்மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், அன்னதானமண்டபம் என்பன சிமெந்து கற்களாலும் அமைக்கப்பட்டு உள்வீதி, மகாமண்டபம் என்பன சிற்பவேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் அலங்காரமாக கட்டப்பட்டது. தூபியை நிர்மாணிப்பதற்கென இந்தியாவிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டு  அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் கலையம்சத்துடனும் அழகாக அமைக்கப்பட்டு 1962 ம் ஆண்டு ஆனி மாதத்தில் வேதாகமவிதிப்படி சைவக்குருமார்களால் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

1962 ம் வருடங்களில்….

அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகத்தை தொடர்ந்து 40 தினங்கள் மண்டலாபிஷேகமும் நிகழ்த்தப்பட்டு பூர்த்தி தினத்தில் 1008 சங்குகளில் சங்காபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றன. விஷேட பூஜைகளுடன் மாலையில் அம்பிகை அழகிய பூந்தண்டிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.    அம்பிகை மீது கொண்ட பக்தி பெருக்கின் நிமிர்த்தம் திரு.துரைராசா குடும்பத்தினர் சங்காபிஷேகத்தை நாம் 1990 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வரும்வரை மிகச்சிறப்பாக செய்து வந்தனர். தொடர்ந்தும் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு , உள்வீதி சீமெந்து தரையாகவும், சுற்றுமதில், புதிய வசந்தமண்டபம், கே.வீ.துரைச்சாமி எனும் தனி அடியவரால் கட்டப்பட்ட 3 தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் என்பனவும் அழகுற அமைக்கப்பட்டு அம்பிகையின் ஆலயம் ராஜகம்பீரத்துடன் மிளிர்ந்தது. அம்பிகையின் அருளாட்சியும் அவளது அருட்கடாட்சமும், அவளது புகழும் பெருகி ஊர்மக்கள் அனைவரும் மட்டுமன்றி யாழ் குடா நாட்டின் பல கிராம மக்களும் கூட வந்து அன்னையின் உற்சவங்களில் கலந்து அவளது அருளாசியைப் பெற்றுச் சென்றனர். இதன்பின்னர் ஊர்மக்கள் திருப்பணிச்சபை ஒன்றை நிறுவி திருப்பணிகளில் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டனர். திரு. இலங்கைநாயகம் அவர்கள் திருப்பணிச்சபையின் ஆரம்ப கால தலைவராகவும் பின்வந்த காலங்களில் திரு.இராசா தலைவர் பதவியிலும் இருந்து பெருந்தொண்டுகள் செய்துவந்தனர். ஆலயத்தொண்டுகளில் மிகவும் ஈடுபட்டவரான சிவஸ்ரீ இ.நவமணி ஐயா தன்னைப் போன்று தனது வருங்கால சந்ததியினரான தனது புதல்வர், புதல்விகளையும் பக்திநெறி நிற்க வைத்து ஆசாரசீலர்களாக வாழவைத்தார். அவ்வாறே ஊர்மக்களும் பக்திநெறி நின்று அம்பிகைக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதில் பிடிமானம் உள்ளரவாய் வாழ்ந்து வந்தார். நவமணி ஜயா அவரின் முழுமையான முயற்சியினால் அம்பிகையின் ஆலயம் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது.

அம்பிகையின் இரத பவனி ஆரம்பம்..

மயிலிட்டி கண்ணகி அம்பாள்

அம்பாளுக்கு புதிய சித்திரத்தேர் ஒன்று அமைத்து அதில் அம்பாளை எழுந்தருளச் செய்து அவளது அருளாசியை பெற்றுவிடவேண்டுமென்பதில் அம்பிகை அடியவர்கள் பலரும் விரும்பினர். வினாசித்தம்பி என்பவரின் மூலமான அம்பிகையின் அருள்வாக்கிற்கு அமைய நவமணி ஐயாவின் வழிகாட்டலில் திரு.இரத்தினராசா,  திரு.வையாபுரி,   திரு.ஐயாத்துரை ,   போன்ற அம்பாள் மீது அளவு கடந்த பக்தியை உடையவர்களின் அயராத உழைப்பின் பலனாகவும் அம்பிகையின் அருட்கடாட்சத்தினாலும்  சித்திரத்தேர் அமைக்கும் பணி ஆரம்பமானது. இப்பணி திரு.சு. வையாபுரி அவர்களின் பிரத்தியேக செலவிலும் முயற்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு ஏற்பட்ட அபிப்பிராய பேதங்கள் காரணமாகவும்நிதிப்பற்றாக்குறை காரணமாகவும் அப்பணி சற்று தாமதித்துச் செல்லவே திருப்பணிச்சபை ஒன்றை நிறுவி    அப்பணி அவ்வருடமே (1970ம் ஆண்டுகளில்) பூர்த்திசெய்யப்பட்டு சித்திரத்தேர் பவனி மிகவும் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நிறைவேற்றப்பட்டது. சித்திரத் தேர் அமைக்கப்பட்டதன் பின் திருவிழாக்கள் 15 தினங்களாக அதிகரிக்கப்பட்டு பின் அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 18 தினங்களாக அதிகரிக்கப்பட்டது.

இவ்வாறாக  வெகு சிறப்பாக 1990 ம் ஆண்டு வரை பூஜைகளும் திருவிழாக்களும் இடம்பெற்றன.
By – Shutharsan.S

மேலதிக விபரங்களுக்கு – http://mayilaikannaki.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345