மாதகல் வ. கந்தசாமி

மாதகல் வ. கந்தசாமி பற்றிய ஒரு பார்வை

மாதகலில் கல்வியில் செல்வாக்கில் சிறந்து விளங்கிய உடையார் பரம்பரையின் வழி வந்தவர் வன்னித்தம்பி கந்தசாமி ஆசிரியர். இவர் மாதகல் வ.கந்தசாமி என சகலராலும் அறியப்பட்டவர். இவர் ஆரம்பக்காலத்தில் கோயில்களில் சமய பிரசாரங்களில் ஈடுபட்டவர். காலப் போக்கில் எளியோர் உழைக்கும் வர்க்கம் விவசாயிகள் நலனில் அக்கறை ஏற்பட்டதன் விளைவால் முற்போக்கு வாதியாக மாறினர். சமதர்ம கொள்கையில் நின்று உழைப்பாளிகள் உயர பாடுபட்டனர். இவர் தன் இலட்சிய வழியில் தன் சகாக்களையும், இளையோரையும் இணைத்து செயல்பட்டார். இதனால் சமதர்ம கொள்கையில் பலர் ஈர்க்கப்படலாயினர்.

மாதகல் வ. கந்தசாமி

தமிழர் மத்தியில் சாதி வேறுபாடு வேருன்றி நின்ற காலத்தில் சைவக்கோயில்களில் கீழ்பட்ட சாதியினருக்கு அனுமதியில்லை. ஏழை, எளியவர் ஒன்றுணைத்து வணங்க முடியாது. இந்நிலையில் கோயில்கள் சகலருக்கும் திறக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்காளியாக செயல்பட்டவர். இன்று கோயில்கள் எல்லோருக்கும் திறக்கப்பட்டு சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல கோயில்களில் சுவாமி தூக்க கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் போக வேண்டும்.

மாதகல் வ.கந்தசாமி அவர்களை சீனாக் கந்தசாமி என அழைப்பர். இவர் சீனா சென்று பீக்கிங் வானொலி நிலையத்தில் தமிழ் மொழி அறிவிப்பாளராக கடமையாற்றி சிறந்த அறிவிப்பாளர் என்ற பெயரினையும் பெற்றார். இவர் சீனதேசத்து இளையோருக்கு தனது ஆங்கில மொழி புலமையைப் பயன்படுத்தி ஆங்கில மூலம் தமிழ்மொழியை கற்பித்து அவர்களை சீன தேசத்து தமிழ் ஒலிபரப்பாளர்களாக பயிற்றுவித்து மேம்படுத்தியவர்.

மாதகல் வ. கந்தசாமி யாழ் மாவட்ட பொதுக்கூட்டங்களில் பேசுவார். என்றால் மக்கள் அவர் பேச்சை கேட்க ஒன்று கூடுவார். இவர் சிறந்த பேச்சாளரான படியால் அரசியலில் கூட்டங்கள், இலக்கிய விழாக்கள் விவாத மேடைகள் என்பவற்றில் பங்குபற்றி சிறந்த பேச்சாளராக முத்திரை பதித்தவர் இவரது இரவு பொழுதுகள் பலருக்கு அறிவூட்டும் செயற்பாட்டில் கழிந்தது என்றால் மிகையாகாது.

மாதகல் கந்தசாமி சிறந்த எழுத்தாளர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி முற்போக்காளர் கருத்துக்களை தாங்கி வந்த மாதாந்த சஞ்சிகைகளில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். வால்மீகி இராமயணம் மூல நூல் என்பதை மற்றைய இராமாயணங்கள் அதனை அடிப்படையாக கொண்டவை எனவும் தெளிவு படுத்தியதோடு இராணுவம் மக்பெத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையை தொடராக எழுதி வெளியிட்டனர்.

மாதகல் கந்தசாமி இரு நூல்களை எழுதி வெளியிட்டவர்.

1. மேற்கோள் ஆயிரம்
2. பண்டாரநாயக்கா பொன் மொழிகள்

இன்று இந்நூல்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது.

சீன தேசத்திலிருந்து திரும்பிய பின் 3 ஆண்டுகள் மலையக மக்களின், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொழிற்சங்க நிர்வாகியாகயிருந்து செயல்பட்டார்.

இவர் சீன செல்லுமுன்னர் யா/ சுன்னாகம் ஸகந்தவரோதராயாக் கல்லூரியில் சிறந்த ஆசிரியராக இருந்து தான் பயின்ற தொழில் நுட்ப பாடத்துடன் க.பொ.த சா.த வகுப்பிற்கு தமிழ் மொழியையும் திறம்பட கற்பித்தவர். சீனா சென்று திரும்பிய பின்னர் வட்டு இந்துக் கல்லூரியில் கடமையாற்றி சிறந்த ஆசிரியர் என்ற பெயரினைப் பெற்றார்.

By -‘[googleplusauthor]’

நன்றி – ஆக்கம்- வி. சிற்றம்பலம், முன்னாள் அதிபர்

Sharing is caring!

Add your review

12345