முல்லை வீரக்குட்டி

முல்லை வீரக்குட்டி

முழுப் பெயர் :திரு.மு.வீரக்குட்டி
பிறந்த இடம்  : தம்பிலுவில்
பிறந்த திகதி : 23.03.1949
கல்வி கற்ற பாடசாலை: தம்பிலுவில் மகாவித்தியாலயம், கல்முனை பாத்திமா கல்லூரி.

1968 இல் க.பொ.த.சாதாரணதரம் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே கவிதையுலகில் பிரவேசித்த இவரின் கவிதைகளுக்கு சிந்தாமணி, வாரமஞ்சரி, தினபதி, கவிதா மண்டலம் போண்ற பத்திரிககள் களமமமைத்துக் கொடுத்தன. கவிதையின் இலக்கணத்தை கவிவேந்தன் நீலாவாணனிடமும், கவிஞர் பாண்டியூரனிடமும் சுத்தமாகக் கற்றுக்கொண்ட இவர் கவிதையோடு மட்டுமல்லாமல் அனேகமான சிறுகதைகளும் , கட்டுரைகளும் எழுதியள்ளார். இவரின் கவிதைப் படைப்புகள் பல தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், கலசம், செய்தி, மாணிக்கம், புதுயுகம், குமரன், மல்லிகை, ஜனவேகம், தினக்கதிர், தினக்குரல், சுடர்ஒளி, நவமணி, முதலான முன்னணி ஏடுகளில் வெளியானது மட்டுமல்லாது, வானொலி மஞ்சரி போன்ற வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியிருந்தன. கல்முனை புதிய பறவைகள் கவிதாமண்டல அமைப்பாளருள் ஒருவரான இவர் , 1974 இல் திருமலையில் புதிய ஜனநாயக எழுத்தாளர் கலை இலக்கிய மாநாடு நடத்தவும் காரணமாயிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்திய கலை இலக்கிய மாநாட்டில் கவிதை படிக்கவும்  விமர்சிக்கவும் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

இன்னும் விடியவில்லை’ எனும் கவிதைத் தொகுதியை தம்பிலுவில் ஜெகா மற்றும் குறுஞ்சி வாணன் போன்றோருடன் சேர்ந்து வெளியிட்டார். இவரின் கவிதைத் திறமையைப் பாராட்டி திருக்கோயில் பிரதேச செயலகம் 1996 இல் சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்தின் கௌரவித்தது. கடந்த மாதம் கிழக்கு மாகாணமட்டக் கவிதைப்போட்டியில் பங்குபற்றி இவரின் கவிதை முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டது. இவர் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்…

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – kavignan.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345