மு. பேராயிரவர்

சுதுமலையில் ஸ்ரீமான் பெரியதம்பி முத்துத்தம்பி விதானையாருக்கும் திருமதி பொன்னம்மா அவர்களுக்கும் மகனாக 23.09.1923 இல் பிறந்தார். ஆரம்பக்கல்வியை சுதுமலை சிந்மய பாரதி வித்யாசாலையிலும் உயர்கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கற்றார். 1940ம் ஆண்டு இலண்டன் மெற்றிகுலேசன் பரீட்சையில் சித்தியடைந்தார். 1942 இல் கொழும்பு சர்வகலாசாலையில் ஆங்கிலத்தை முக்கிய பாடமாக எடுத்து 23வது வயதில் இலண்டன் B.A. பட்டம் பெற்றார்.

யாழ் பரமேஸ்வரா கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரிகளில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி 1948 இல் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார். பின் 1959இல் உப அதிபராகவும், 1971-1979 வரை அதிபராகவும், 30 ஆண்டுகள் ஒரேகல்லூரியில் சிறந்த சேவை செய்து யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் ஒரு தனி இடத்தை பெற்றார். முதன்முதலாக வர்த்தக கல்வியை உயர்தர வகுப்பில் புகுத்தி பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தார்.

மாணவர்களுக்கு இலவச கல்வி போதித்தல், விளையாட்டு உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கிக்கொடுத்தல் என தனது சேவையை வளர்த்தவர்.

வடமாகாண ஆசிரியர் சங்க காரியதரிசியாகவும், தலைவராகவும், அகில இலங்கை ஆசிரியர் சங்க நிர்வாகக்குழு அங்கத்தவராகவும், யாழ்மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

1959இல் புதுடெல்லியில் நடந்த சர்வதேச கல்வி மாநாட்டிலும் 1963ம் ஆண்டு இந்தோனேசியாவிலும் பிரதிநிதியாக கலந்துகொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.

4.4.1979 இல் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் வே.சங்கரப்பிள்ளை அவர்களின் சிலை நிறுவினார். 30.06.1979இல் பதிவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின் நைஜீரியா சென்று கற்சினா ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியராகவும் விவாதக்குழு தலைவராகவும், இல்ல பொறுப்பாசிரியராகவும், தமிழ்ச்சங்க தலைவராகவும் இருந்து தமிழ் வளர நைஜீரியாவில் பங்காற்றினார்.
ரொறன்ரோ கல்விச்சபையில் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிச்சபையிலும் பணிபுரிந்தார். இந்திய கனடிய கல்விக்குழு அங்கத்தவராகவும் தமிழ்பாடவிதானம் பாடப்புத்தகம் தயாரிக்க உதவியாளராகவும் பணியாற்றினார்.
இங்கிலாந்தில் மானிப்பாய் இந்து பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் முதன்மையானவர். 20.01.1994இல் இறைவனடி சேர்ந்தார்.

நன்றி- மூலம்-www.suthumalai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345