ம.கங்காதரன்

10.03.1910ல் பிறந்த இவர் நல்லூர் மூத்தவிநாயகர் கோவிலருகில் வசித்தார் கொழும்பு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்று ஆண்டு கால ஓவிய பயிற்சியினை பெற்றார். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் சிறிது காலம் ஓவிய விரிவுரையாளராக இருந்துள்ளார். கண்ணாடியிலும் திரைச்சீலையிலும் இந்துசமய கடவுள் உருவங்களை கீறினார். சாய வர்ண பிரயோகத்திலும் கண்ணாடி ஓவிய கலையிலும் குறித்த மரபின் தொடர்ச்சியாக இவரை இனம் காணலாம். இவர் திரைச்சீலையில் வரைந்த பிள்ளையார் உருவப்படம் ஒன்று கொழும்பு கலாபவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்

Sharing is caring!

2 reviews on “ம.கங்காதரன்”

  1. N.balamuraly says:

    ஒவியர்,காட்டூணிஸ்ட் தம்பா(இயற்பெயர் சந்திரக்குமார்)வின் விபரங்களை சேகரித்துப் தங்கள் இணையத்தில் வெளியிடுங்கள்.இவர் ஈழநாடுப் பத்திரிகையில் வெளியான மாணவருலகுப் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும்,சட்டர்டே ஆங்கிப் பத்திரிகையில் சதா அரசியல் காட்டூண்கள் வரைந்தவருமாவார்.தற்போது நோர்வேயில் வசிக்கிறவர்.மேற்கொண்டு விபரங்கள் தெரியவில்லை. இவர் கொக்குவில் தொழில்னுட்பக்கல்லூரியில் என்னுடன் ஒரு வருசம் படித்தவர் தான்.பிறகும் பழகியவர் தான்.ஆனால்,அப்ப யார் இந்த விபரங்களை எல்லாம் கவனித்தார்கள்?

  2. பாலமுரளி தங்களின் நல்ல கருத்துக்களுக்கும் தகவலுக்கும் நன்றி.

Add your review

12345