வடலூர் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி

வடலூர் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி

அனலைதீவின் தான்தோன்றி ஆலயங்கள் வரிசையில் புளியந்தீவு ஶ்ரீ நாகஸ்வரம் என விளங்கும் அருள்மிகு நாக தம்பிரான் கோவில், அரசம் புலம் ஶ்ரீ மனோன்மணி அம்பாள் என மிளிரும் அருள்மிகு எழுமங்கை நாச்சியார் கோவில் என்பவற்றுடன் வடக்கு அம்மன் ஆலயமும் இலங்கை இந்து கலாசார திணைக்களத்தின் ஆலய கணக்கெடுப்பு பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது.

வடலூர் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி தோற்றம் அன்னையின் அருள் மகிமைகள் பலவற்றால் வளர்ச்சி கண்டது. காலத்தால் பிந்திய வடலூரின் மக்கள் குடியேற்ற வாழ்வியல் சூழல் மற்றும் பக்தி மேலீட்டான நம்பிக்கைகள் அன்னையை அங்கு ஆவாகனம் செய்ய எதுநிலையானது. பொதுவாக தீவகத்தில் அம்மன் (கண்ணகி ) மற்றும் ஐயனார் போன்ற கிராமிய தெய்வ வழிபாடு சற்றே அதிகமாக காணப்படுகின்றது. இதில் கண்ணகி அம்மன் வழிபாடு என்பது ஈழத்தில் விசேடமானது மதுரையை எரித்த கண்ணகை நாக உருக்கொண்டு ஈழம் வந்து கோயில் கொண்டமை இலக்கிய மற்றும் கர்ண பரம்பரை கதைகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வந்த அம்மன் ஒவ்வொரு தீவிலும் தரிதுச் சென்றதாகவும் அவ்விடங்களில் ஆலயங்கள் தோற்றம் பெற்றதாக கருதப்படுகின்றது.

இன்றும் நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற்றுறை (கரம்பொன்) போன்ற துறைமுக-இறங்கு துறை கடலோரம் இவ்வாலயங்கள் ஆகம வழிபாட்டு தலங்களாக அருள் பரப்புகின்றன.

சைவ சமய வழிபாடுகளுக்கு தடை ஏற்படுத்திய அன்னியர் ஆட்சி காலத்தில் (அன்னியர் வருகை மற்றும் கொள்ளைஇ கோதாரி போன்ற தோற்று நோய்கள் பரவல் ) அனலை மக்களுக்கு கனவிலும் நனவிலும் அருள் மழை பொழிந்து ஆட்சி செய்த அம்மன் வடலூரிலும் கோயில் கொண்டாள். பக்தர்களின் பசிப்பிணி போக்கிஇ நோய் பிணிகளுக்கு நிவராணியாகி நின்ற அத்தாயை முத்துமாரி அம்மனாக போற்றி துதித்தனர். பொங்கல்இ மடைஇ குளிர்த்தி என நேர்த்திகடன் செலுத்தி அன்னையின் இஷ்டசித்திகளை பெற்று வருகின்றனர்.

வடலூர் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி

இந்நிலையில் அம்மனுக்கு ஆறுமுக நாவலரின் சம்ஸ்கிருத மயமாக்கல் சிந்தனையில் ஆகம முறையில் கோயில் கட்டி பூசை வழிபாடும் இயற்றி வரலாயினர். அதன் தொடர்ச்சியாக முத்துமாரி அம்பாள் எனும் தலப் பெயருடன் சிம்மாசனத்தில் அமர்திருக்கும் உக்கிர வடிவான சிலவிக்ரகம் மூலமூர்த்தியாக பிரதிஸ்டை செய்யப்பட்டது. பின்னர் அவ்விக்கிரகம் சிதைவுறவே மூல மூர்த்தியாக சாந்த சொரூபினயாக அங்குச பாசாங்குசமுடன் அருளாட்சி புரியும் புவனேஸ்வரி அம்மன் விக்ரகம் பிரதிட்டை செய்யப்பட்டு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி என்ற திருநாமத்தால் அம்மன், ஆலயம் என்பன போற்றப்படலாயிற்று.தற்போது சுற்று பரிவாரங்களுடன் கூடிய ஆலயமாக புனருத்தானம் செய்யப்பட்டு குடமுழுக்கு 2013 ல் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் ஆலய பெயருக்கு ஏற்றவாறு மூல மூர்த்தியாக கரும்பு மற்றும் அங்குச பசாங்குசம் ஏந்தியிருக்கும் இராஜ ராஜேஸ்வரி விக்கிரகம் பிரதிட்சை செய்யும் இறை கைங்கரியம் முற்று பெறவில்லை மாறாக பழைய புவனேஸ்வரி அம்பாள் யந்திர பீடத்திலிருந்து அருளாட்சி புரிகின்றாள்.

இங்கு ஆராயப்பட வேண்டிய வரலாற்று விடயங்கள் யாது எனில் நயினையில் நாக புவனேஸ்வரியாக விளங்கும் பத்தினி அம்மன் எவ்வாறு ஆதி அம்மனாக ஆலடி பொந்தில் மறைவிடத்தே வழிபாடு இயற்றப்பட்டரோஇ அவ்விதமே அனலையின் வடலூரில் இராஜ புவனேஸ்வரியாக கல்லால பெருவிருட்சமத்தில் மீண்டும் கோயில் கொண்ட தெய்வ சங்கல்ப்பம் அது சார்ந்த காலப் பதிவுகளும் தேடலுக்கு உரியதாகும்.

மேற்படி கருதுகோளுக்கு சான்றுகளாக

1. அனலைதீவு கிழக்கு துறைமுக ஒல்லாந்தர் கால கோட்டை அடித்தளம்
2. கௌரி அம்மன் ஆலயம் (அனலைதீவு கண்ணகி அம்மன் – இது பற்றிய திரு கனகசபாவதி நாகேஸ்வரன் விரிவுரையாளர் அவர்களின் கருத்துகள் )
3. அவ்விடம் இன்றும் மாதா கோவிலடி என விளிக்கும் காரணம் மற்றும் ஒல்லாந்தர் கால குறிப்புகள்
4. வடலூர் ஒல்லாந்தர் கலங்கரை விளக்கம் அதனோடு அண்டிய இயற்கை துறைமுகம் போன்ற ஓங்கல் பாறைத்தொடர்கள் – இது பண்டைய வர்த்தக, இறங்கு துறையாக விளங்கி இருக்கலாம் என்ற கருதுகோள் :புவியியல் ஆசிரியர் (திரு கணபதி – வலய கல்வி அதிகாரி)

வடலூர் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி

இவை குறித்து கல்விசார் தேடல்கள் வரலாற்று மற்றும் வாழ்வியல் பின்னணிகளை முன்னணிக்கு கொண்டுவர உதவும்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – analaiexpress.ca இணையம்

Sharing is caring!

Add your review

12345