வரணி மகா வித்தியாலயம்

வரணி மகா வித்தியாலயம்

வரணி மகா வித்தியாலயம் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் வரணிப்பகுதியில் சுட்டிபுரம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில்  இப்பாடசாலை அமைந்துள்ளது. சாவகச்சேரித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.வே.குமாரசாமி அவர்களின் அயராத உழைப்பினாலும், அப்போது வரணிக் கிராமசபையின் தலைவராக இருந்த திரு.வீ.சிதம்பரநாதன் அவர்களின் பெரும் முயற்சியாலும் அமைக்கப்பட்ட இப்பாடசாலை அப்போதைய கல்வியமைச்சர் திரு.M.D.பண்டா அவர்களால் 11-01-1954 இல் திறந்துவைக்கப்பட்டது.

இப்பாடசாலையில் 1963 ஆம் ஆண்டு முதல் க.பொ.த.உயர்தர வகுப்பில் விஞ்ஞானக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாடசாலையின் தேவை கருதி 1967 ஆம் ஆண்டு கல்வியமைச்சு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொடுத்தது. உடையார் திரு.சிவா நல்லமாப்பாணர் அவர்கள் இப்பாடசாலைக்கு வணக்க மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.

1974 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்விகற்ற மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முதன்முதலாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி வருகின்றனர். 1987 தொடக்கம் 1998 வரை இப்பாடசாலை அதிபராகக் கடமையாற்றிய திரு.S.துரைராசா அவர்கள் இப்பாடசாலையின் கல்வித்தரத்தை உயர்த்த பெரும் பாடுபட்டு உழைத்தார். இவரின் காலத்தில் அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுச் சென்றனர். 1998 இல் இப்பாடசாலை அதிபராகப் பொறுப்பேற்ற திரு.ந.நவரட்ணராஜா அவர்கள் கடந்த 2011 வரை அதிபராகக் கடமையாற்றி இப்பாடசாலையின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றினார்.

வரணி மகா வித்தியாலயம்

இப்பாடசாலையில் கல்வி பயின்ற திரு.எஸ்.எஸ்.உதயகுமார் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல்த்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இப்பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களில் பலர் இன்று பொறியியலாலர்களாக, மருத்துவர்களாக, விரிவுரையாளர்களாக, நிர்வாக அதிகாரிகளாக, சிறந்த ஆசிரியர்களாக, தொழிலதிபர்களாக பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது 1000 பாடசாலைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு 1AB தரத்தில் உள்ள இப்பாடசாலையில் 1000 மாணவர்களுக்குமேல்  கல்விகற்று வருகின்றார்கள். 51 ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றார்கள். தற்போது இதன் அதிபராக திரு.K.மங்களேஸ்வரன் அவர்கள் கடமையாற்றி வருகிறார்.

இப்பாடசாலைக்கு  சுற்றுமதில் அமைக்கப்படும் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது ,நன்கொடை வரவேற்கப்படுகிறது ..

வரணி மகா வித்தியாலயம்
வரணி மகா வித்தியாலயம்

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://www.newvarany.com இணையம்

Sharing is caring!

Add your review

12345