வல்லிபுரம்

வல்லிபுரம் இப்பிரதேசத்தின் தொன்மையான வரலாற்று இடமாகவும், பழைய இராஐதானியான சிங்கை நகரமாகவும் இனம் காணப்படுவது வழக்கம். “புரம்” என்பது நகரத்தைக் குறிக்கும். மணல்மேடுகள் நிறைந்ததால் இப்பெயர் பெற்றதோ என்ற ஐயுறவு உண்டு. இப்பிரதேசத்தில் காணப்படும் வல்லிபுர ஆழ்வார் திருத்தலம் :வல்லி” என்ற பெண்மணியோடு தொடர்புபட்டதால் இப்பெயர் பெற்றது என சமய அறிஞர் கருதுகின்றனர் இப்பிரதேசத்தில் இடிபாடுடைய கட்டிடங்களின் அடித்தளங்கள் காணப்படுவதனால் இப்பிரதேசம் ஒழுங்கமைக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வாராச்சிக்கு உட்படுமாயின் சில செய்திகள் வெளிவரலாம்.

Sharing is caring!

Add your review

12345