துன்னாலை ஆயில்நின்றொல்லை வல்லியானந்தப்பிள்ளையார்

துன்னாலை ஆயில்நின்றொல்லை வல்லியானந்தப்பிள்ளையார்

யாழ் குடாநாட்டில் செயற்கொடி தேவன் குறிச்சியில் துன்னாலை வடக்கு கிராமத்தில் ஒல்லாந்தர், போர்த்துகேயர் இந்நாட்டிற்கு வந்து போகமுன் ஆயில் என்ற மரம் 16 அடி உயரமுள்ள மணற் புட்டியில் பெரு விருட்சமாக இருந்தது . அந்த மரத்தின் கீழ் விநாயக விக்கிரக மொன்றை வைத்து விளக்கெற்றி வந்தார் ஒரு பெரியார். அந்த பெரியாரின் பெயர் வல்லியானந்தர் ஆகவே அந்த விக்கிரகத்தை மூதாதையர் வல்லியாநந்த பிள்ளையார் என அழைத்து வந்தனர் இதுவே துன்னாலை ஆயில்நின்றொல்லை வல்லியானந்தப்பிள்ளையார் ஆகும். இந்த விக்கிரகம் ஆயில் நின்றொல்லை விநாயகர் எனவும் அழைக்கப்பட்டது. ஆதிமூலம் என்றும் அழைக்கப்படும்.

ஆரம்பத்தில் வல்லியானந்தர் எனும் பெரியாரின் கனவில் விநாயகர் தோன்றினார் “விக்கிரகமொன்று ஆயில் மரத்தின் அடியில் மணலால் மூடப்பட்டு இருக்கின்றது காசிவ கோத்திரத்திலிருந்து ஒரு பிராமணன் காசியிலிருந்து கொண்டு வந்து விக்கிரத்தை மணலால் மூடிவிட்டு இறந்துவிட்டான் அதை நீங்கள் எடுத்து அதற்கு விளக்கேற்றி வணங்கி வந்தால் பெரும் விநாயகர் ஆலயமாக தோற்றமளிக்கும்” என்று கூறினார். இதை அடுத்த நாள் அதிகாலை எழுந்து இக்கிராமத்தில் வசித்து வந்த மறைஞான போதியர் எனும் பிராமணரிடம் வல்லியானந்தர் கூறினார் ஆயில் மரமும் புட்டியும் உடைய இடத்தை தேடி சென்றார். அங்கு புட்டியை தோண்டிபார்க்கும் பொழுது ஒரு விநாயக விக்கிரகம் இருந்தது விக்கிரகத்தை வெளியில் எடுத்து ஆயில் மரத்தின் கீழ் வைத்து வல்லியானந்தருடன் பூசகரும் விளக்கேற்றி வந்தனர். பூசகர் இல்லாத காலம் வல்லியானந்தர் விளக்கேற்றுவார். வல்லியானந்தரின் சந்ததியில் ஆண் சந்ததியினர் சின்னர் பகுதியினரும் பெண் சந்ததியினர் இராமநாத புலவர் சந்ததியினரும் ஆகும். வல்லியானந்தர் இறந்த பின் இவர்களே பராமாரித்து வந்தனர். இராமநாதர் என்பவர் இந்தியாவில் தேவகோட்டையில் உள்ள பாட சாலையில் சைவசமயம், தமிழ் இலக்கியங்களை படித்து வந்தார். அவருடன் கூட படித்தவர் அல்லையம்பதியில் வசித்து வந்த முருகேசு என்பவர் ஆவார். இருவரும் படித்து இராமநாதர் புலவர் பட்டமும் முருகேசு பண்டிதர் பட்டமும் பெற்றனா். பின் கடற் பயணம் மூலம் இலங்கை வரும் போது கடல் அலையால் கப்பல் சரிய ஆரம்பித்தது அந்நேரத்தில் புலவர் வல்லியானந்தப்பிள்ளையாரை நினைத்து அழுதார் ஒரு அசரீரி அவரின் காதில் “ பயப்படாதே நீ படித்தது எல்லாவற்றையும் கொண்டு என் புகழ் பாடுவாய்” என்றுது. அதன் பின் கடல் அமைதியாக கப்பல் கரையை அடைந்தது . உடனடியாக ஊருக்கு வந்தவுடன் சின்னர் பகுதியால் கட்டிய ஆலயம் ஒரு சிறு ஆலயமாக இருக்கபட்டது. அவ் ஆலயத்தில் இராமநாதர் விநாய விரதங்கள் கந்த புராணம் என்பவற்றை ஆரம்பித்தார். ஊர் மக்கள் சிறப்பாக ஆலயத்தை வழிபடத் தொடங்கினர். இராமநாதரும் அவருடைய மைத்துனர் லோகபோட்டான் ஓவசியரும் சேர்ந்து ஆலயத்தை வளர்ச்சியாக பெரிதாக கட்டத் தொடங்கினர். சின்னர் பகுதியினர் இதை விட்டு விலகி கொட்டிகுளிப்பான் பிள்ளையாரை கட்ட ஆரம்பித்தனர்.

அவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராமநாதருக்கு பெண் குழந்தைகள்தான் அதிகம் பிறந்தது. இவர் மனம் வருந்தி கந்தசஷ்டி விரதத்தை இவ்வலாலயத்தில் அனுட்டித்து வந்தார். ஒரு நாள் இராமநாத புலவருக்கு கனவில் விநாயகர் தோன்றி இவ் ஆலயத்தை கவனமாக கவனித்துவா உணக்கொரு ஆண்குழந்தை பிறக்கும். நான் காசியிலிருந்தே இங்கு வந்து தோன்றியனான் ஆகவே உன் குழந்தைக்கு காசிலிங்கம் என்றே பெயர் வைக்குமாறு கூறினார். உன் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளையே கூடுதலாக தருவேன் என்றும் கனவில் கூறினார். அதேவேளை இராமநாதருக்கு ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு. அதற்கு காசிலிங்கம் என்றும் பெயர் வைத்தார்.

இதனால் அவருக்கு ஆலயத்தில் அன்பு மிகவும் கூடியது. அவர் 1937ம் ஆண்டு இறந்தார்.

ஆலயசிறப்பு

ஒல்லாந்தர் காலத்தில் நுணுவில் கட்டைவேலி கிறிஸ்தவ ஆலயத்தின் பக்கத்தில் ஒரு சிவன் கோயில் இருந்தது. அதை ஒல்லாந்தர் உடைத்தெறிந்து விட்டு வல்லியானந்தப் பிள்ளையார் ஆலயத்தை பார்ப்பதற்காக வந்தனர். இவ் ஆலயம் அவர் கண்களுக்கு தோற்றமளிக்கவில்லை. எல்லா ஆலயங்களும் உடைந்த போதும் இவ்வாலயம் உடைக்கப்படாமல் காட்சி அளித்தது. ஆகவே இவ்வாலயம் வலிய உதித்த வல்லியானந்த எனும் பெயருடன் விளங்கியது. நுணுவில் சிவன் கோயில் உள்ள இடத்தில் தற்போது நுணுவில் பிள்ளையார் காணப்படுகின்றது. வல்லியானந்த பிள்ளையார் ஆலயம் அந்தணர்கள் சுற்றி இருப்பதால் பூஜைகள் தவறாது ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத்தை சேர்ந்த சந்ததியினர் 1967 ம் ஆண்டு மகோற்சவத்தை ஆரம்பித்து பங்குனி அமாவாசையில் தீர்த்தம் ஆடுமாறு கொண்டாடி வருகின்றனர்.

1979ம் ஆண்டு ஒரு சிறப்பான தேரையும் அத்தேர்த் திருவிழா உபயகாரர் செய்து தேர் உற்சவத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். தேர் கட்டிடம் வந்ததன்பின் உப்புத்தண்ணீர் கிணறு நல்ல தண்ணீராக தோற்றமளித்தது. அக்கிராமத்து மக்கள் அயற் கிராமத்து மக்கள் எல்லோரும் பாவித்து வருகின்றனர். 1980ம் ஆண்டு பழைய நிர்வாகத்தினர் அத்தழிந்து போக வடமராட்சி உதவி அரசாங்க அதிபர் வேலும்மயிலும் தலைமையில் காசிலிங்கம் தலைமையில் 09 உறுப்பினர் கொண்ட ஒரு சபை இயங்கி பரிபாலனசபையினால் ஆலயம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. காசிலிங்கம் இறந்தபின் தற்போது அவருடைய மருமகன் சுப்பிரமணியம் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இவ்வாலயத்தை சேர்ந்த நிலப்பரப்பு புலவர் சந்ததியினருக்கும் வேலவுடையார் சந்ததியை சேர்ந்த வடிவேலுவிற்கும் சங்கர உடையார் சந்ததியினருக்கும் உரிமையானதாகும். தற்போது கோயிலின் பராமரிப்பு செலவுகள் (பூசகர் சம்பளம், பூசைசெலவு) என்பவற்றை மகோற்சவ உபயகாரர்களே செய்து வருகின்றனர். 1967ம் ஆண்டு மகோஹ்சவம் ஆரம்பமாகிய காலம் தொட்டு இவை நடைமுறையிலுள்ளது.

வல்லியானந்தப்பிள்ளையார் செய்த அற்புதங்கள்

ஓல்லாந்தர் ஆலயத்தை தகர்தெறிய வரும்போது வேதியர் தனது பூநூலை பிள்ளையாரிடம் அடைக்கலமாக வைத்து விட்டுசென்றார். ஆயில் மரவிழுதுகளால் ஆலயமும் பூநூலும் மூடப்பட்டு ஒல்லாந்தர் கண்கட்கு தோற்றமளிக்கவில்லை.

உப்புத் தண்ணீர் கிணற்றை 1979ம் ஆண்ட நல்ல தண்ணீர் கிணறாக மாற்றியமைக்கப்பட்டது.
பக்தர்கள் வேண்டுகோள்களை முன்வைத்தால் நிறைவேற்றுவார். அதாவது அவர் முன்னிலையில் நின்று கேட்டால் நிறைவேற்றுவார். பின்னிலையில் கேட்டால் நிறைவேற்றமாட்டார் குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை என்ன தவறு செய்தபோதும் அவர்கட்கு ஒரு கஸ்டம் வர அவரை அப்பா என்று அழைத்தால் மட்டும் அவர் உறவினராக வந்து கூடவே உதவுவார். இது இன்றுவரை நடைமுறையிலுள்ளது. விளாம்பழப்பாகு, விளாம்பழவிளக்கு, நெய்விளக்கு என்பவற்றை அவருக்கு படைத்தால் நாம் தேவையான வரத்தை பெறறுக்கொள்ளலாம்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://valliyanathapillaiyar.blogspot.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345