வெட்டுக்களி குளம்

வெட்டுக்களி குளம் ஆனது நெடுந்தீவு மத்திய பகுதியில் காணப்படும் மிகப் பரந்த பெரிய குளம் ஆகும். மழை காலத்தில் நீர் நிறைந்து காணப்படும் கோடை காலங்களில் நீர் வற்றிவிடும். இக் குளம் ஆதிகாலத்தில் பூதங்களைக் கொண்டு தோண்டப்பட்டதாக ஒரு பரப்பரைக் கதை காணப்படுகின்றது.

இவ் வெட்டுக்களி குளத்திற்கும் கடலுக்கும் இடையே தொடர்புக் கால்வாய்கள் இருக்கின்றன. தற்போது கடல் நீர் உட்புகுவதை தடுக்க இத் தொடர்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதனால் நீர் நிறைந்து காணப்படுகின்றது.

நிலத்தடி நீரை பேணுவதற்காக ஆரம்ப காலங்களில் இந்த குளங்கள் அமைக்கப்பட்டன. இன்று நாம் இந்த குளங்களை சரியாக பராமரிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் நல்ல நீருக்கு பெரும் பஞ்சம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ”கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று படித்திருக்கிறோம். இதே போல கிராமம் தோறும் இயன்றளவு குளங்களை அமைத்து பராமரிப்பதன் மூலமும் மரங்களை பேணி ஒரு பசுமை புரட்சியை ஏற்படுத்ததாவிடின் நாமும் எமது எதிர்கால சந்ததியும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

வெட்டுக்களி குளம்
வெட்டுக்களி குளம்
வெட்டுக்களி குளம்
வெட்டுக்களி குளம்

Sharing is caring!

Add your review

12345