வேலணை

வேலணை, சரவணை, நாரந்தனை, புளியங்கூடல், சுருவில், பருத்தியடைப்பு, கரம்பொன், ஊர்காவற்றுறை முதலிய பகுதிகள் இதில் அடங்கும். இவை லைடன் என்ற அதிகாரிக்குக் கீழ் இருந்தமையால் லைடன் என்ற பெயர் வந்ததென்பர். முருகப்பெருமானின் வேல் வந்தடைந்த இடமாகையால் வேலணை என்ற பெயர் வந்ததெனவும், விலர் லேன் என்ற பிரதானியின் கீழிருந்த படியால் வேலணை என்ற பெயர் வந்ததெனவும் கூறுகிறார்கள். லைடன் தீவின் வேலணைப் பிரதேசம் நெடுந்தீவு மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குச் செல்லும் வழியிலுள்ளது. இப் பகுதி யாழ்ப்பாணக்குடா நாட்டுடன் அதிக தொடர்புகள் கொள்ளக்கூடிய வசதிகள் ஆரம்ப காலங்களிலிருந்தபடியால் இங்குள்ள மக்கள் கல்வியிலும், உத்தியோகங்களிலும், வியாபாரத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இங்குள்ள பல கல்விமான்களும், சமூக சேவையாளர்களும் நாட்டிற்காக சிறந்த சேவைகளையாற்றியுள்ளனர்.

Sharing is caring!

Add your review

12345