ஸ்ரீ நடேசர் கோவில் நீராவியடி, கடைச்சாமி ஒழுங்கை

ஈழத்தில் ஞான குருபரம்பரையை ஏற்படுத்திய கடையிற் சுவாமியரால் “இது சிதம்பரமடா” என்று முன்மொழிந்த இடத்தில் சிதம்பர பாணியில் 1920 இல் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் பூசித்த விநாயகரும் இக் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலமூர்த்தி சிவாகம சுந்தரி சமேத நடேசப் பெருமான், பரிவார மூர்த்திகள் – விநாயகர், வைரவர் ஆகியோர். தினமும் இரு காலப்பூசைகள் நடைபெறுகின்றன. நடேசப் பெருமானுக்கு உரிய ஆறு அபிஷேகங்களும் விசேடமாக நடைபெற்று வருவதுடன், சிவராத்திரி, நாயன்மார் குருபூசை என்பனவும் விசேட வழிபாட்டுக்குரிய தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Sharing is caring!

Add your review

12345