17ம் நூற்றாண்டு யானை முகம்

Sharing is caring!

பருத்தித்துறை அல்வாய் வடக்கு வியாபாரிமூலையில் உள்ள இன்பருட்டி சித்தி விநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட இச்சிலையானது பின்னர் காலஞ்சென்ற கந்தநயினார் அவர்களின் சொந்த மடத்தில் வைத்திருக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை அரும்பொருள் காட்சியகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்த யானை முகம் மரத்தால் செய்யப்பட்டது. அத்துடன் இந்த சித்தி விநாயகரை கற்பூர விநாயகர் என்றும் அழைப்பர். ஏனெனில் இக்குள்ள கடம்ப மரத்தில் கற்பூரம் விளைந்ததாக ஐதீகங்கள் கூறுகின்றன. இக்கடம்ப மரங்கள் யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் மட்டுமே உள்ளன. ஓன்று இன்பருட்டி சித்தி விநாயகர் மற்றையது பொலிகண்டி கந்தவனக் கடவையில் ஆகும்.

நன்றி : தகவல் – பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com