நம்பிக்கையில்லம் இணுவில்

தென்னிந்தியத் திருச்சபையானது யாழ்ப்பாணத்தின் தமது தேவாலயங்களை அமைத்து அதனூடாக சபைகளை நிறுவி அதன் மூலம் தொண்டுகள் ஆற்ற முன்வந்தனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இணுவில் கிராமத்தில்  மக்லியொட் என்ற பெயரில் பெண்களுக்கான வைத்தியசாலையை கட்டி சேவையாற்றினர். வழமைபோல அதே காணியில் தேவாலயத்தையும் நிறுவினர். இணுவில் மக்கள் சைவத்தில் ஊறியமையால் இத் தேவாலயத்தை நாடவில்லை. வைத்தியசாலையில் பணிபுரிந்தவர்களும் வேறு இடத்தில் இருந்து வருபவர்களும் மட்டுமே வணக்கம் செலுத்தி வந்தனர். தமது நோக்கினை நிறைவேற்றிக் கொள்ளவே வறியவர்களிற்கும், ஊனமுற்றவர்களிற்கும் உணவு, உடை தங்குமிட வசதி என்பன கொடுத்து உதவ முற்பட்டனர். இவர்களின் நலங்களை அடிக்கடி பரிசிலி;க்க வேண்டியுள்ளதால் இணுவில் வைத்திய சாலையில் ஒரு இல்லம் ஒன்றை நிறுவினர். 1981 ஆம் ஆண்டு “நம்பிக்கை இல்லம்”என்ற சிறப்புப் பெயருடன் இன் நிறுவனம் உதயமாயிற்று. அம்பல வாண அடிகள் வைபவ ரீதியாக அதனைத் தொடக்கி வைத்தார். அவ்வில்லம் அன்று முதல் இன்றுவரை சிறப்பாக இயங்கி வருகின்றது.
தங்குமிடங்கள் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் தனித்தனியான மண்டபங்கள் அமையப் பெற்றுள்ளன. தற்போது 50 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் தங்கி நின்று கல்வி கற்கின்றனர். மேற்பார்வையாளர் உட்பட 07 பேர் தங்கி நின்று இரவு பகல் கடமை புரிகின்றனர். பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு ஒருவாகனம்  இவ்வில்லத்தினரே கொள்ளவனவு செய்துள்ளனர். பெற்றோர்கள் பிள்ளைகளை மாதமிருமுறை சந்திக்கின்றனர். விடுமுறைக் காலங்களில் வீடு சென்று திரும்பம் வசதி செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் இல்லாதவர்கள் இல்லத்திலேயே தங்குகின்றனர்.
தமது வாழ்வில் ஊனமுற்றவர்களிற்கோ  உடல் வலுக்குறைந்து பாதிப்பிற்கு உள்ளானவர்களும் பிறரினைப் போல வாழ வழிகாட்டும் இல்லமாக  இது திகழ்கின்றது.

நன்றி: பொறுப்பாளர், நம்பிக்கை இல்லம்,  இணுவில்
சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345