கீரிமலையினிலே கவிதை நூல்

கவிஞர் வி. கந்தவனம் அவர்களால் 1969 ம் ஆண்டு காலப்பகுதியில் கீரிமலையினிலே என்ற கவிதை நூலானது தமிழில் யாழ் இலக்கிய வட்டத்தினூடாக வெளியிடப்பட்டது. யாழில் பெருமளவான எழுத்தாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் வெளிக்கொணரப்படவில்லை.
யாழ். இலக்கிய வட்டம் கடந்த நான்கு ஆண்டுக ளாக ஆக்கபூர்வமான பல இலக்கிய சாதனைகளைச் செய்திருக்கிறது. அவற்றுள் ஒன்று நல்ல தரமான நூல்களை வெளியிட்டமையாகும்.
யாழ். இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்கள் பலர் ஈழத்திலும் தமிழகத்திலும் பற்பல போட்டிகளி லெல்லாம் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி, இலங்கைக்குப் பெருமை தேடித் தந்திருக்கிருர்கள். அப்படிப் பெருமை தேடித்தந்த ஒருவரான கவிஞர் வி. கந்தவனத்தின் கீரிமலையினிலே’ என்னும் காவியத்தை யாழ். இலக்கிய வட்டம் தனது 14ஆவது வெளியீடாகத் தருகிறது.
கவியரங்கத்துக்கொரு கந்தவனம், கருத்து மிக்க சொற்பொழிவுக்கொரு கந்தவனம், நகைச்சுவைக்கொரு கந்தவனம், இனிய, எளிய, செந்தமிழ்ப் பாடல் களுக்கொரு கந்தவனம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலத் தமது கவிதைகள் மூலம் கூறி, சமூகத்தின் ஊழல்களைச் சாடுவதற்கு ஒரு கந்தவனம் என்றெல்லாம் அறிஞர்கள் பலராலும் பாராட்டப் பெறும் இவர் யாழ். இலக்கிய வட்டத்தின் இன்றைய தலைவராவர்.
Leave a Reply