கொழும்புத்துறையின் துறைமுகங்களும் சுங்கவரியும்

கொழும்புத்துறையின் துறைமுகங்களும் சுங்கவரியும் பற்றிய ஒரு பார்வை. யாழ்ப்பாண அரசில் மாதோட்டம், அரிப்பு, மன்னார், கச்சாய், கொழும்புத்துறை, பருத்தித்துறை, காங்கேசன்துறை முதலிய துறைமுகங்கள் இடம் பெற்றன. உள்நாட்டு வாணிபமும் இவற்றினூடாக நடைபெற்றன. தென்னிந்திய வணிகர்கள் இலகுவில் இத்துறைமுகங்களுக்கு வரக்கூடுமாகையால் இத்துறைமுகங்கள் மலையாளக் கரைகளிலும், சோழ மண்டலக் கரைகளிலும் உள்ள பட்டிணங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன.
மாதோட்டம் 13ம் நூற்றாண்டளவில் அதன் முக்கியத்துவத்தை இழந்தது. எனினும் முத்துக்குளிப்பு நடக்கின்ற காலங்களிலே அங்கு பல இடங்களில் இருந்து வணிகர்கள் வந்து கூடுவது வழக்கம். காங்கேசன்துறை, கொழும்புத்துறை, ஊராத்துறை என்பவை ஏனைய துறைமுகங்களிலும் கூடிய முக்கியத்துவத்தை பெற்றிருந்தன. ஊராவத்தை முற்காலத்தில் இருந்தே மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. பொலநறுவைக் காலத்தில் இங்கு பிற நாட்டு வணிகர்கள் வந்ததற்குச் சான்றாக முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழகக் கல்வெட்டு அமைகின்றது. காங்கேசன் என்ற ஒருவனால் சிறப்புப் பெற்றதனாலேயே காங்கேசன்துறை என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும். ஆரியச்சக்கரவர்தி காங்கேசன் என்ற விருதினைப் பெற்றிருந்தார். எனவே ஆரியச்சக்கரவர்த்தி இத்துறைமுகத்தைப் பெருப்பித்து வர்த்தக வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தான் எனக் கருதலாம். வட இலங்கையிலே அரசு ஏற்பாட்டோடு கொழும்புத்துறை முக்கியத்துவம் பெற்றது. தலைநகருக்கு அருகிலிருந்தமையாலும், குடாநாட்டிற்கும் வன்னி நாட்டுக்குமிடையில் தொர்பு கொள்வதற்கு வசதிகளை கொண்டிருந்ததினாலும் கொழும்புத்துறை யாழ்ப்பாண பட்டிணத்தின் மிகப் பெரிய துறைமுகமாக விளங்கியது. சீலைகளுக்கான லாஞ்சினைப் பேறு தரகு, துறைமுகவரி ஆகியனவும் கொழும்புத்துறை அதிகாரி வரியும், பிற துறைமுகவரிகள், பச்சிலைப்பாலை கடவைகளிலுள்ள சுங்கவரி என்பனவும் வர்த்தக வரிகளாக இடம்பெற்றன். தமிழரசர் கால வழமையின் படி நாட்டிலே விற்பனையான துணிகள் யாவும் அரசினது முத்திரையைப் பெற்றிருக்க வேண்டும். கடவைகள் வழியாகவும், துறைமுகங்கள் ஊடாகவும் அவ்வாறு அரசனது முத்திரையிடப்படாத துணிகளை எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஒவ்வொரு சீலைக்கும் முத்திரையிடப்பட்ட போது இவ்வாறு இடப்பட்ட கூலியே லாஞ்சினைப்பேறு எனப்பட்டது. எட்டுச் சேலை, நான்கு கச்சை, இருபத்தைந்த
சால்வை ஆகியவற்றிக்கு ஒரு பணம் லாஞ்சினைப்பேறாக கொள்ளப்பட்டது. நெசவாளர்களின் வீடகளிலோ, பிறவீடுகளிலோ துணிகள் விற்பனை நடத்தவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொது இடத்திலே தான் துணிகள் யாவும் விற்பனையாக வேண்டும். உணவுப் பொருட்கள் இறக்குமதியாகமிடத்தும் அரசனின் பாகமாகக் கொள்ளப்பட்ட வரியே தரகு என்பதாகும். ஆரியச்சக்கரவர்திகளின் அட்சிக்காலத்தில் பொருட்களை எற்றி வருகின்ற நாவாய்கள் துறைமகத்தை அடையும் போது ஒரு பணம் தரகு இறுப்பது வழக்கம்.
நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள அங்காடிகளும் பட்டணத்திலும் தானியங்கள் விற்பனையாகுமிடத்து கொள்வோர் ஒருபணம் பெறமதியான தானியங்களை பெறுமிடத்து ஒவ்வொரு பிடி தானியம் தரகாகக் கொடக்கவெண்டும் இவ்வழக்கம் அனுராத புரகாலத்திலிருந்தே நிலவி இருக்க வேண்டும். சிங்கள மன்னரின் கல்வெட்டுக்களிலும் இவ்விதமான குறிப்புக்கள் வருகின்றன. ராநை்திர சோழனது மாதோட்டக் கல்வெட்டு தானியங்களை விற்போனும் கொள்வோனும் ஒவ்வொருபிடி  அரசிறையாக கொடுக்கம் வழக்கம் பற்றி கூறுகின்றது. நாட்டில் உற்பத்தியான பொருட்களையும் விற்போர் ஒரு பொது இடத்தில் அரசேவைகள் முன்னிலையில் விற்கவேண்டும். துறைமுகங்களிலே சங்கவரிகளைச் சேர்க்கும் பொறுப்பு குத்தகையாளரிடம் விடப்பட்டிருந்தது.
நாட்டின் முதன்மை வாய்ந்த துறைமுகமான கொழும்பத்துறையின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கம் இடையில் துரிதமான போக்குவரத்து நடைபெற்றது.  அத்தோடு வர்த்தக படகுகளும் கூடதலாக இத்துறைக்கே வந்தன. இத்துறைமுகத்தின் சுங்கவரியை சேர்க்க உரிமைபெற்றவா இத்துறைமுகத்தின் அதிகரியாகவும் பொறுப்பேற்றிருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரிக்குச் செல்வோரும் பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வோரும் துறைமுகத்தில் வாழ்ந்த மீனவரும் துறைமுக அதிகாரிக்கு வழமையான கட்டணங்களை செலுத்த வேண்டும். துணிகள் யாவும் சுங்கவரித்தறையில் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு அனுமதி கிடைத்தது. மக்களாற் சுமந்து செல்லப்பட்ட ஒவ்வொரு சுமைக்கும் அரைமரக்கால் சுங்கவரித் துறையிற் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு அனுமதி கிடைத்தது. மக்களாற் சுமந்து செல்லப்பட்ட ஒவ்வொரு சுமைக்கும் அரைமரக்கால் சுங்கவரியாக கொள்ளப்பட்டது.
மேலும் இவ்வாலயத்திற்கென இந்தியாவில் இருந்து தோணிகள் வத்தைகள் மூலம் கொழும்புத்துறைமுகம் உடாக மானியங்கள் வந்துள்ளதாகவும் (விசேடமாக சிதம்பரம்) கர்ண பரம்பரை செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு சிறப்பாக நெடைபெற்றுவரும் காலங்களில் கொழும்புத்துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் கப்பல்களில் வரிவசூலிப்பதற்கு அரியாலையில் நிலைகொண்டிருந்த குதிரைப்படைகளையும் பார்வையிடவதற்காக செம்மணியூடாக அரியாலைக்கு வந்த சங்கிலி மன்னன் கொழும்புத்துறை முகத்திற்கு வந்து மேற்பார்வை செய்து விட்டு நெடுங்குளத்தில் நீராடி கடவுளை தரிசித்து செல்வது வழக்கம் என கூறப்படுகின்றது.
இந்த விநாயகர் ஆலயமானது அமைந்துள்ள இடமான நெடுங்குளம் காரணப்பெயரைக் கொண்டு விளங்குகின்றது. அக்காலத்து அரசர் கோயில் ஒன்றைக் கட்டும் போது நைவேத்தியம் வைப்பதற்காக ஒரு நெடிய குளத்தையும் வயலையும் அமைத்திருந்தனர். என்று யாழ்ப்பாண வரலாறு கூறுகின்றது. எனவே இத்தகைய துறைமுகத்திலே நெடுங்குளம் என்னும் அழகிய கிராமத்திலே (வயலும் வயல்சார்த மருதநிலமும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமும் சூழ அமைந்துள்ள) விநாயகர் அமைந்திருந்து அடியார்க்கு அருட்கடாட்சத்தை வழங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.
By -‘[googleplusauthor]’