துலைக்கோ போறியள்

துலைக்கோ போறியள்ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் துலைக்கோ போறியள் என்ற இக்குறும்படமாகும்.

இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள்.

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.

இக்குறும்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை வலைப்பதிவரும் எழுத்தாளருமான ம.தி.சுதா எழுதி இயக்க முக்கிய பாத்திரங்களாக ஜெயதீபன், ஏரம்பு, செல்வம், செல்லா மற்றும் சுதேசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை செல்லா மேற்கொள்ள படத் தொகுப்பை கே.செல்வமும் இசையை அற்புதனும் வழங்கியிருக்கிறார்கள். குறும்படத் தயாரிப்பை ரஜிகரன் மேற்கொள்ள படத்திற்கான பட வடிவமைப்புக்களை மதுரன் அமைத்திருக்கிறார்.

எம்மிடையே இருந்து அகன்று கொண்டிருக்கும் மொழி வழக்கு மற்றும் பாரம்பரிய வழக்கங்களின் பின்னணி குறித்து எள்ளலுடனான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் எல்லோரிடத்திலும் உண்டு. அதை, ரசிக்கின்ற வடிவத்தில் படமாக சொல்வதில் முன்வந்திருக்கிறோம். இது, ஆரம்ப முயற்சி- நல்லவற்றுக்கான ஆதரவு என்பது இன்னும் புதியவர்களை ஈழத்து சினிமா, குறும்பட சூழலுக்கு அறிமுகப்படுத்தும். அதன் இன்னொரு படியாகவே துலைக்கோ போறியள் நாம் மக்களின் முன்னால் வைக்கிறோம் என்று படக்குழுவினர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://www.stsstudio.com இணையம்.

1 review on “துலைக்கோ போறியள்”

  1. suja senthil சொல்கின்றார்:

    padaththai enge paarppathu pthivettrinaal nallathu.