பால்குளம் – பாசையூர்

தேச நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி அமைச்சும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து யாழ் மாநகர சபையினூடாக இக்குளமானது புனரமைக்கப்பட்டது. இதற்குரிய நிதி உதவியை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது. பத்தாயிரம் கனமீற்றர் அளவுடைய இக்குளத்தின் புனரமைப்புக்கு 1.06 மில்லியன் நிதி உதவி 2005 ம் ஆண்டு வழங்கப்பட்டது. யாழ் நீர்வள பாதுகாப்பு சூழலியல் முகாமைத்துவ கருத்திட்டத்தினூடாக செய்யப்பட்டது. நீர்வளம் காப்பதன் மூலம் சுமூகமான வாழ்வை மேம்படுத்த முடியும். எனவே நீர் நிலைகளை பாதுகாப்பதுடன் வீண் விரயத்தையும் தவிர்ப்பதன் மூலம் வழமான வாழ்வை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.