அனலை தீவு

நயினாதீவிற்கு மிக அண்மையிலுள்ள ஒரு அழகான சிறிய தீவாகும். இத்தீவைச் சூழ நான்கு புறமும் கடல் அலைகளால் தாக்கப்படாது. கற்பாறைகள் அணைபோல் அமைந்திருப்பதால் அணலை தீவு என்ற பெயர் வந்ததெனவும் பின்னர் இப்பெயரே அனலை தீவாக மாறியதாகவும் கூறப்படுகின்றது. இங்குள்ள மக்கள் அனைவரும் சைவ சமயிகளாகவே உள்ளனர். இங்கு வேறு மதங்களைப் புகவிடாது தடுத்த பெருமை இவ்வூர் மக்களையே சாரும். இத்தீவானது சிறந்த மண்வளமும், நீர்வளமும் கொண்டு விளங்குகின்றது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே மேற்கொண்டு வருகிறார்கள். இங்குள்ள ஐயனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தீவக மக்களில் பலர் இன்று உத்தியோகங்களிலும், உயரிய வியாபாரத்துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள். இங்குள்ள பல கல்வி மான்களும், சமூக சேவையாளர்களும் இத்தீவகத்தின் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றியுள்ளார்கள்.