கொழும்புத்துறை

“கொழுப்புத்துறை” என்று கூறினால் பெரும்பாலான யாழ்ப்பாண மக்களுக்கு ஞாபகத்தில் வருவன இரு விடயங்கள் – ஒன்று சைவப் பெரியார் யோகர் சுவாமிகள், அடுத்தது இலந்தைக்குளம் மன்று வாழும் பெருமான் விநாயகமூர்த்தி கோயில், கோயிலின் தெற்கு வாசலில் யோகரின் ஆசிரமம் அமைந்திருந்தது என்பதும், சைவம் பரவச் செய்தார் என்பதும் யாவரும் அறிவர்.

“கொழும்புத்துறை” யாழ் மாநகரத்தின் கிழக்கு எல்லையில் அமைந்து இருக்கும் ஒரு “கிராம நகரம்”. இது கிராமத்திற்கு உரிய எழில் வனப்புக்களையும் அதே நேரத்தில் ஒரு நகரத்துக்கு உரிய சகல வசதிகளையும் கொண்டிருந்தது. இதன் எல்லைகளாக மேற்கில் பாண்டியன்தாழ்வு, கிழக்கே அரியாலையும், வடக்கே நல்லூரும், தெற்கே பாசையூர். ஈச்சமோட்டையும் அமைந்துள்ளன.