சுதுமலை

இலங்கையின் வடபகுதியில் உள்ள சுத்தநீரோடைகளும் மா பலா தெங்கு வாழை கமுகு பனை முதலான தாவரங்களும் சிறப்புற்றோங்கும் கண்கவர்; வனப்புக்கள் மிகுந்த யாழ்ப்பாணத்தின் நடுப்பகுதியில் ஆனைக்கோட்டை மானிப்பாய் உடுவில் இணுவில் தாவடி முதலாய ஊர்களின் மையத்தில் ஓர் உயரிய கிராமமாக “சுதுமலை” விளங்குகிறது. “சுதுமலை” என்ற பெயர் தோன்றிய விதத்தை ஆராய்ந்த பொழுது பல விதமான விளக்கங்களை அறியமுடிந்தது. “சுள்ளு மலை” என்பதே சுதுமலையாகும். சுள்ளு என்றால் வெள்ளி எனப்பொருள்படும். அதாவது வெள்ளி மலை எனக் கூறப்படுவது வெண்சங்குகள் இங்கே அதிகமாக குவியலாக இருந்தமையேயாகும். சுள்ளுமலையே பின்னர் மருவி சுதுமலையாக அழைக்கப்படுகிறது.

கண்ணகியின் வரலாற்றோடு தொடர்புபட்ட இடமாக சுதுமலை விளங்குகிறது. அதாவது சீற்றம் தணியாத கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கினாள். பின்பு தன்னை ஜந்து தலை நாகமாக மாற்றி மதுரை மாநகரை துறந்து தெற்கு நோக்கிச் சென்று முதலில் நயினாதீவில் தங்கினாள். பின்பு நவாலி சீரணி சுதுமலை அளவெட்டி மட்டுவில் வற்றாப்பளை மடு முதலான இடங்களில் தங்கினாள் என்று கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. எனவே சுதுமலையில் கண்ணகி தங்கிச்சென்றதன் காரணமாகவே சுதுமலையில் அம்மன்கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டுவருகின்றது. இவ்வாலயத்தின் மூலமாகவும் சுதுமலை மேலும் சிறப்புப்பெறுகின்ற இடமாக உள்ளது.

3 reviews on “சுதுமலை”

  1. srisangar சொல்கின்றார்:

    நன்றி.
    இந்த ஊா் பற்றி மேலும் பல தகவல்கள் http://www.suthumalai.com இல் உள்ளது.

  2. சுதர்சன் சொல்கின்றார்:

    தங்களின் தகவலுக்கு நன்றி