தெல்லிப்பளை

யாழ் குடாநாட்டின் புகழ் பூத்த புண்ணிய ஊர்களில் தெல்லிப்பளையும் ஒன்றாகும். பல கிராமங்களை உள்ளடக்கிய பேரூர் தெல்லிப்பளை. தெல்லிப்பளை நகரம் வடக்கே மாவிட்டபுரம், கிழக்கே வரத்திரவிளான், தெற்கே மல்லாகம், மேற்கே அம்பனை என்பவற்றை எல்லைகளாகக் கொண்டது. சமயம், கல்வி, அரசியல், விவசாயம் ஆகிய துறைகளில் இக்கிராமத்தவர் நாட்டிற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இதனால்தான் போலும் ஆசுகவி வேலுப்பிள்ளை தான் இயற்றிய பாடல் ஒன்றில் “பேரூர் தெல்லிப்பளை” என்று பாடியுள்ளார்.