மயிலிட்டி

இலங்கையில் வடபகுதியில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் மயிலிட்டி உள்ளது. யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆண்ட சங்கிலிய மன்னன் காலத்தில் இப்பகுதியை மூன்று தேவர்மார்கள் பராமரித்து வந்ததாகவும் அவர்கள் வீரமாணிக்க தேவர், பெரிய மாணிக்க தேவர், நரசிம்ம தேவர். இவர்கள் சகோதரர்கள் இத்தகவலை முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

பிற்காலத்தில் காங்கேசன்துறை பட்டணசபை எல்லைக்குள் வீரமாணிக்கதேவன் துறை 5ம் வட்டாரமாகவும், பெரிய மாணிக்கதேவன் துறை 6ம் வட்டாரமாகவும், இதுபோல் மயிலிட்டி கிராம சபை எல்லைக்குள் 9ம் வட்டாரம், 10ம் வட்டாரம், நரசிம்ம தேவர் பராமரித்த இடமாகவும் இருந்து வந்தது.
இதன்படி வீரமாணிக்க தேவன் துறை மக்களும், பெரிய மாணிக்க தேவன் துறை மக்களும், கரையாளர் என்றும், நரசிம்ம தேவர் பராமரித்த மக்கள் வெள்ளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வெள்ளாளர்கள் கமம், பயிர் செய்கையில் ஈடுபட்டனர். கரையாளர்கள் கடல் மார்க்கமாக பாய்மரக் கப்பலில் சென்று கடல் வாணிபம் (பிற நாடுகளுக்கு) செய்து வந்தார்கள். பிற்பகுதியில் அரச நெருக்கடி காரணமாக வாணிபத்தை குறைத்து கடல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்
அப்போது இப்பகுதியை சிறு சிறு குறுச்சிகளாக பெயரிட்டு வாழ்ந்து வந்தார்கள். அவை, மேற்கிலிருந்து ஒபய சேகராதோட்டம், கொத்தாவத்தை, கொட்டுப்பள்ளம், மார்புநோய் வைத்தியசாலை, வேரவல், வேரவல் வடக்கு பகுதியில் பிற்காலத்தில் குடியேறி வேல்வீதி என்றும், துறை, பணிவு, புதுத்தெரு, தோப்பு, பாதிரியடைப்பு, திருப்பூர், கிழக்குத்தெரு, பழந்துறை, காளவாய், குடியேற்றம், காலான்காடு, கரையான்காடு, தச்சப்பகுதி என்று அழைத்தனர்

நன்றி : மயிலிட்டி இணையம்
மேலதிக விபரங்களுக்கு Myliddy Web