வல்வை வெளி

யாழ் மாவட்டத்தின் வடமராட்சியையும் வலிகாமம் பகுதியையும் இணைக்கும் இடமாக இது அமைந்துள்ளது. இதில் வல்வை பாலமும் அமைந்துள்ளது. கோடை காலங்களில் வறண்டு காணப்படும் பிரதேசம் மாரி காலங்களில் நீர் நிரம்பி மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. சவர் நிலமாகவுள்ள இப்பிரதேசத்தில் சவுக்கு மரங்கள் முன்னர் நாட்டப்பட்டு இருந்தது. இப்போது அரிதாகவே உள்ளது. கட்டாந் தரையாகவுள்ள இப்பிரதேசத்தை வளப்படுத்தி தொழிற்சாலைகள் நிறுவதற்குப் பாவித்தால் எமது பிரதேசங்களில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம். அன்றேல் பசுமைப்புரட்சியை ஏற்படுத்த மர நடுகையை மேற்கொண்டால் ஒரு செயற்கை வனமொன்றை உருவாக்கி வாழ்வை வளப்படுத்த முடியும்.