கல்வியன்காடு

யாழ்ப்பாணத்திலே செந்தமிழும் சிவநெறியும் செழிந்துவாழும் ஊர் கல்வியங்காடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கு எல்லையாக கட்டைபிராயும் வடக்கு எல்லையாக இருப்பாலையும், கோப்பாயும். தென்மேற்கு எல்லையாக நல்லூரும். மேற்கு எல்லையாக திருநெல்வேலி கொண்டு அமைவு பெற்றுள்ளது. கல்வியங்காடு நிலப்பரப்பு ஏறக்குறைய 700 ஏக்கர் கொண்டதாகும்.
“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்பதற்கு அமைய கோயில்கள் நிறைந்தவை கல்வியங்காடு ஊர் ஆகும். அந்தவகையிலே வீரபத்திர் ஆலயம்இ கலட்டி பிள்ளையார் ஆலயம்,  இலங்க நாயகி அம்மன் ஆலயம், முக்குறுனி பிள்ளையார் ஆலயம் குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயங்களை மையமாகக் கொண்டு மக்களுடைய வாழ்வு வளம்படுத்தப்படுகிறது.
இங்குள்ள பொதுநூலகம் ஞான பாஸ்கரோதய சங்கம் ஆகும். இதன் நூலக அங்கத்தினர் கூட்டுறவு மனப்பாங்குடன் சமூக வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு பகுதியையும் மற்றும் உள்ளக வெளியக விளையாட்டுக்களையும் சிறார் கல்வி மேன்பாடு என சமூக சம்பந்தமாக மேற்கொண்டு வருகிறது.
நீர்வளத்தினை எடுத்துக் கொண்டால், நிலக்கீழ் நீரை மக்கள் கிணறுகள், குழாய்க் கிணறுகள் மூலம் பெற்று வீட்டு தேவைக்கும் விவசாய தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் வளர்க்கப்படுகின்றன.
அனைத்து துறைகளிலும் எமது ஊர் சமூகத்தினையே வளர்ச்சி பெற்றுள்ளது.  இதற்கு உதாரணமாக இயற்கையாக கிடைக்கும் மூலவளங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யபடுகிறது.  மற்றும் சிறுகைத்தொழில் வளர்ச்சி அவற்றை சந்தை படுத்தும் கல்வியங்காட்டுச் சந்தை, விளையாட்டு துறையை ஊக்கப்படுத்தும் முகமாக விளையாட்டு அரங்கம்.  மற்றும் வள்ளுவர் கூறியதற்கு அமைய
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.”கல்வியங்காடு என்ற சிறந்த பெயரைப் பெற்ற எமது ஊர் பெயருக்கு அமைவாக கல்வி அறிவிலும் மேம் பட்ட சமுதாயம் ஆகும்.