மாட்டு வண்டி

Sharing is caring!

ஆரம்ப காலங்களில் பொருட்களைக் காவிச்செல்லவும், தூரதேச பயணங்களுக்காகவும், விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்காகவும் மாட்டு வண்டி பாவிக்கப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பாவிக்கப்படுகின்றது. வைர மரத்தால் ஆக்கப்பட்ட உடல் பகுதியைக் கொண்டது. சில்லும் மரத்தால் ஆக்கப்பட்டு உலோக வளையமிடப்பட்டு காக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டி ஆனது இரண்டு எருதுகள் பூட்டி இழுக்கப்படுகின்றது. இதற்கு நுகம் என்ற பகுதி உதவுகின்றது. இதைவிட ஒரு மாடு பூட்டி இழுக்கக்கூடிய ஒற்றைத் திருக்கை வண்டில், பிரேத வண்டில் போன்ற பல்வேறு தேவைகளுக்கேற்ப வண்டில்களும் பாவனையில் இருந்தன. தற்போது போலல்லாமல் சூழலுக்கு பாதிப்பில்லாமல் பாவிக்கக்கூடிய ஒரு வாகனமாக இருந்துள்ளது மட்டுமல்லாமல் மூதாதையர்களின் அரிய பொக்கிசமாக இன்றும் உள்ளது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com