பித்தளைச் செம்பு

தற்போது சில்வர் செம்புகள் பாவனையில் உள்ளது. முன்னர் பித்தளைச் செம்பின் பாவனைதான் இருந்தது. உடல்நலத்திற்கு ஏற்றது பித்தளைச்செம்பின் பாவனையே. தற்போது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது பித்தளைச் செம்பில் அரை மணி நேரம் வைத்திருக்கப்பட்ட நீரிலுள்ள பெருமளவு கிருமிகள் அழிவடைகின்றன. நமது முன்னோர்கள் தொழில்நுட்பம் வளராத காலத்தில் கூட உடல் ஆரோக்கியத்திற்குரிய உணவுகள், உபகரணங்களைப் பாவித்ததன் மூலம்தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். செம்பானது மங்கள நிகழ்வுகளுக்காகவும், அன்றாட தேவைகளுக்காகவும் பாவிக்கப்படுகின்றது. பித்தளைச் செம்பின் பாவனை குன்றிப்போனதற்கு முக்கிய காரணம் இதில் படியும் செழும்புதான். இந்தச் செழும்பை புளி போட்டுத் தேய்ப்பதன் மூலம் அகற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் அதன் பாரமும்தான் காரணம். என்ன காரணங்களைக் கூறினாலும் முன்னோர்களின் கண்டுபிடிப்பு ஒரு அற்புதமான விசயம்தான்.
Leave a Reply