அம்பலவாணர் சிவகுருநாதன்

சுதுமலையில் அம்பலவாணர் பார்வதிப்பிள்ளை தம்பதியின் சிரேஷ்ட புதல்வனாக 11.8.1914 அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை மலாயாவிலும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்ந்தார். தமது பதினாறாவது வயதில் ‘கேம்பிறிட்ச் சீனியர்’ பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்று மேன்மையுற்றார். 1939ஆம் ஆண்டு சட்டத்தரணியாகச் சட்டத்தொழிலில் காலடி எடுத்து வைத்து 1944 ஆம் ஆண்டு தம்மை நியாயதுரந்தரராக உயர்நிலைப் படுத்திக்கொண்டு பலரும்போற்றத் தொழிலாற்றினார்.

ஏழைகளுக்காக வாதிட்டார். பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். தனக்கென்று கொண்ட இலட்சியங்களில் கடைசிவரை உறுதியாக நின்ற அன்புருவம் 21.06.1988 அன்று சிவனடிக்கீழ் சென்றடைந்தார்.

 

நன்றி-மூலம்- www.suthumalai.comஇணையம்