அளவெட்டி பண்டிதர் க.நாகலிங்கம்

மரபுவழித்தமிழ் கற்பிப்பதில் வல்ல பேரறிஞராக விளங்கும் இவர் அறுபதுகளில் மல்லாகத்தில் இயங்கிய பண்டித வகுப்பில் கற்பித்துப்  பல பண்டிதர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். அளவெட்டி அருணேதாயாக் கல்லுரியில் புகழ் பூத்த ஆசிரியராய் விளங்கியவர்.

தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் இலகுவாகச் சுவைத்துப் படிக்கத்தக்க வகையிற் கற்பிக்கும் சிறப்பாற்றல் மிக்கவர். தனது கற்பித்தல் அனுபவத்தைத்துணைக் கொண்டு. “செந்தமிழ் இலக்கண விளக்கம் (2002) எனும் நூலை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கண நூல்கள் வரையான நூல்களை ஒப்பிட்டுக்காட்டி இலகுவான மொழிநடையில் எவரும் வியங்கக்கூடியதாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு ஆகும். பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழக இலக்கண ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் இந்நூல் பயன்படவல்லது என்பது அறிஞர்கள் கருத்தாகும்.

Add your review

12345