அளவெட்டி பண்டிதர் மா.மாணிக்கம்

வேலணையைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வாழ்விடமாகவும் கொண்ட இவர் பாடசாலை அதிபராயிருந்து ஓய்வு பெற்றார். பழந் தமிழ் நூல்களை இக்காலச் சாதாரண மக்களுக்கும் விளங்கும் வகையில் இலகுவான மொழிநடையில் எழுதி வழங்க வேண்டும் எனும் கொள்கையுடையவர்.     கச்சியப்ப சிவாச்சாரியார் தந்த கந்தபுராணத்தைக் “கந்தபுராண வரலாற்றுச் சுருக்கம்” (1989) எனும் இலகுதமிழ் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். அதேபோல உலகபொதுநூல் எனப் போற்றப்படும் திருக் குறளையும் இலகு நடையில் “திருக்குறள் வசனச் சுருக்கம்”(1999) எனும் நூலாக வெளியிட்டுள்ளார்.     இந்நூல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் அதன் பயனாக மேலும்பல நூல்களை எழுதிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.