அ.அமிர்தநாதன்

03.11.1923ல் பிறந்த இவர் கரம்பனை சேர்ந்தவர் கொழும்பு தொழில்நுட்ப கல்லூரியில் (1939-1941) ஓவியம், பீங்கான் ஓவியம், புகைப்படகலை என்பவற்றில் பயிற்சி பெற்றார். உருவப்படங்களும் நிலக்காட்சிகளும் வரைவதில் ஈடுபாடு உள்ளவர். சுமார் 200 ஓவியங்களுக்கு மேல் வரைந்துள்ளார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் ஓவிய ஆசிரியராக கடமையாற்றினார். 1961இல் யாழ் மத்திய கல்லூரியில் தனது படைப்புக்களின் கண்காட்சியை நடாத்தியுள்ளார்.

——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்