ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை

வயாவிளானில் பிறந்து வாழ்ந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். எடுத்த எடுப்பில் பாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டார். கல்லடி வேலன் என்றால் கடந்த நூற்றாண்டில் அறியாதார். கண்டனக் கவிதைகள், நகைச்சுவைக் கவிதைகள் முதலாகப் பண்டிதரையும், பாமரரையும் ஒருங்கே கவரவல்ல பாடல்களைப் பாடினார். பாமரர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரனும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான சிலோன் விஐயேந்திரன் “கல்லடி வேலுப்பிள்ளை வாழ்க்கை வரலாறு” எனும் நூல் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். 1860 மார்ச் 7ம் திகதி பிறந்த இவர் 1902 முதல் 1944 வரை “சுதேச நாட்டியம்” எனும் வீராவேசமும், சுதந்திர உணர்வும், ஆக்க இலக்கியத்திறனும் மிக்க பத்திரிகையை நடத்தியவர். இவர் எழுதிய நூல்களிலே மிகப்புகழ் பெற்றது “யாழ்ப்பாண வைபவகௌமுதி” எனும் யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை கூறும் நூலாகும். போலிப்புலவர்களைச் சாடி ‘யதார்த்தவாதி’, ‘வெகுசன விரோதி’ என முழக்கமிட்டுத் தமிழ் இனத்தின் பெருமைக்காக வாழ்ந்திட்ட கல்லடிவேலன் எல்லாரும் நயக்கும் இனிய அறிஞன்.

ஆசுகவி பற்றி …………

“……. இவர் ஒரு கண்டனப்புலி நினைத்தவுடன் பாடும் தெய்வீக சக்தி மிக வாய்க்கப் பெற்றவர்”-பேராசிரியர் ஆ.சதாசிவம்

ஈழத்து தமிழ் கவிதைக் களஞ்சியம்” “பிள்ளை அவர்களுடைய தமிழ்நடை ஒரு இயக்ககாரர் பிள்ளை அவர்களைத் தமக்கு வழி காட்டியாகக் கொள்வார்களாக. “ஈழகேசரி நா.பென்னையா (ஈழகேசரி 1944)

“……. ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞரிலே கவிதைக்கு உரைநடை. பத்திரிகை. கண்டனம். கட்டுரை. வரவாறு. ஆராய்ச்சி முதலிய பல துறைகளில் முன்னணியில் வைத்துக் கணிக்கப்பட வேண்டியவர் கல்லடி வேலுப்பிள்ளை”-பேராசிரியர் சு. வித்தியானந்தன்.
(ஆசுகவி கல்வடி வேலுப்பிள்ளை- வாழ்த்துரை 1973)

அறுபதுகளில் மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் நாவலர் மரபில் வந்த வித்துவசிரோமணி சி.கணேசையரின் மாணவர் பண்டிதர் ச-பொண்ணுத்துரை அவர்கள் ‘பண்டிதர் கழகம்’ ஒன்றை நடத்தினார். அங்கு பண்டிதர் பாலபண்டித வகுப்புகள் நடைபெற்றன. இலக்கணவித்தகர் பண்டிதர் இ.நமசிவாயம், பண்டிதர் இ. நமசிவாயம். பண்டிதர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி. பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை. பண்டிதர் ச. துரைசிங்கம். பண்டிதர் மு. கந்தையா. வித்துவான் கந்தசாமி முதலியோர் கற்பித்தனர். இங்கு பயின்று பலர். பண்டிதர். பாலபண்டிதர். சைவப் புலவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இங்கு கற்பித்தவர்களில் மூவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளது. பண்டிதர் நமசிவாயம் அவர்களுக்கு இலக்கணவித்தகர்” எனும் பட்டமும். பண்டிதர் மு. கந்தையா அவர்களுக்கு “இலக்கிய கலாநிதி” என்றபட்டமும். செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு “கலாநிதி” என்ற பட்டமும் வழங்கப்பட்டன.