ஆறுமுகம் சந்நியாசியார்.

வேலாயுதம் சந்நியாசியாரின் மகனாவார். தந்தையார் ஏற்றிருந்த பொறுப்புக்கள் அனைத்தையும் அவரின் இறப்பின் பின் தாமே பொறுப்பேற்று நடாத்தினார். அருணகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலை நன்கு முன்னேற்றி பூசை வழிபாடுகளையும் செய்வித்தார். பொதுமக்களின் நோய் பிணிகளையும் திரு நீறுகொண்டு நீக்குவித்தார். இவருடைய காலத்திலே முகமூடியணிந்த வேடதாரிகளின் நாட்டுக் கூத்து பிரபலமடைந்தது. நாட்டுக் கூத்தும் சந்நியாசியாரின் திரவுலாவிற்கு அணிசேர்த்தது. இன்றும் மஞ்சத்தடி சிவசுப்பிரமணிய கோவில் சிறப்புற்று இருப்பது எங்கள் ஊர்மக்களின்  இறை நம்பிக்கையாலும் தவப்பேற்றினாலுமாகும்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

2 reviews on “ஆறுமுகம் சந்நியாசியார்.”

Add your review

12345