இணுவில் சின்னத்தம்பிச் சட்டம்பியார்.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலார் என்னும் பெருமகனாரின் புதல்வன். சிறந்த கல்விமானாக விளங்கியமையால் பாடல்களைப் பாடவும், நாடகங்களை எழுதவும் தேர்ச்சி பெற்றிருந்தார். இயற் பெயராக சின்னத்தம்பி எனும் நாமத்தினைக் கொண்ட இவர் சேவையால் சட்டம்பியார் என்ற பட்டமும் இணைக்கப்பட்டு சினனத்தம்பிச் சட்டம்பியார் என அழைக்கப்பட்டார். இவருக்கு நீண்ட காலமாக புத்திரப் பாக்கியம் இல்லாதிருந்தது. அன்னையிடம் சென்று தனது குறைகூறியும் தற்கொலை முயற்சிக்கு சென்ற வேளையிலே கற்பகம் என்னும் மூதாட்டி உருவேறிய நிலையில் அன்னையின் அருளால் உனக்கு குழந்தை கிட்டும் எனக்கூறி தற்கொலை முயற்சியைத் தடுத்தார்.

1924 ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை கிடைத்தது. தனது மூதாதயரின் பெயரான பேராயிரம் உடையார் என நாமம் சூட்டினார். கோயில் தொண்டுகள் செய்வதிலும் ஞானமார்க்கத்தின் வழியிலும் ஈடுபாடு கொண்டார். தந்தை மறுமையுற்றதும் அவருடைய இறுதிக் கடன்களை முடித்ததும் சமயமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு கடைசியில் கைதடியில் தவக்குடில் அமைப்பித்து சச்சிதானந்த சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்