இராசதுரை அமரசிங்கம்

இராசதுரை அமரசிங்கம்இராசதுரை அமரசிங்கம் 1938.05.11 ல் தையிட்டியில் பிறந்தார். தற்போது கட்டுவன் தெல்லிப்பளையில் வசித்து வருகிறார். இவரது கல்லூரி வாழ்க்கைக் காலத்தில் இருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டு நாளடைவில் அது மேலோங்கி இலக்கியத் துறையில் இபரும் திருப்பங்களை ஏற்படுத்தி இன்னும் இத்துறையில் இன்றுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் இலக்கித் துறையை ஏ.ரி. பொன்னுத்துரை அவர்களிடம் பயின்றவர்.

1960 இலிருந்து வீரகேசரி, தமிழன், ஈழநாடு, ஈழமுரசு, சஞ்சீவி போன்ற பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. 2006 ல் ”அகதி அரிசி” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இதனால் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

 By – Shutharsan.S

 

Add your review

12345