இராயப்பு குருசுமுத்து

இராயப்பு குருமூர்த்திஇராயப்பு குருசுமுத்து 1949.11.10 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். நாடகம் நடித்தல், நாடக எழுத்தாக்கம், கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் பல்துறை சார்ந்த எழுத்தாக்கங்களில் ஈடுபட்டார். கல்விப் பொது சாதாரண தரம் வரை பயின்று கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
1960-1981 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். 1968 இல் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்ட “உலகின் ஒளி” என்னும் தொகுப்பு நூலின் ஆசிரியராக இருந்துள்ளதுடன் 1969 இல் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தால் தொடராக வெளியீடு செய்யப்பட்ட “நம் ஒளி” எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். “கலையார்வன்” எனும் பெயரில் எழுதப்பட்ட இவரது ஆக்கங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளன. மேலும் கடலலைகள், கொஞ்சும் நகர், குருதிக்குளியல்கள் போன்ற நூல்களையும் வெளியீடு செய்தார். இவரது ஆக்கங்கள் வெளிநாடுகளிலும் வெளியீடு செய்யப்பட்டது. இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் 2006 இற்கான பல்துறைப் பரிசு இவருக்கு கிடைத்தது.

By -‘[googleplusauthor]’